தயாநிதி மாறனுக்கு மாணவரணி செயலாளர் பொறுப்பு....?!
திமுகவில் கனிமொழிக்கு கட்சி தலைமையே புதிய பதவி கொடுக்க போகிறது என்கிற தகவல் பரபரத்துக் கொண்டிருக்க... தங்களுக்கு மாணவர் அணி செயலாளர் பதவியை கொடுங்க என காய்நகர்த்திக் கொண்டிருக்கிறராம் தயாநிதி மாறன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சியாக வாழ்ந்து மறைந்தார் முரசொலி மாறன். எம்.பியாக, மத்திய அமைச்சராக பதவி வகித்தாலும் அத்துடன் அவர் ஒதுங்கிக் கொண்டது இல்லை. கட்சி விவகாரங்களில் கருணாநிதியை விட கறார் காட்டியவர்; பொதுக்குழு, செயற்குழுவில் பாரபட்சமே பார்க்காமல் செயல்படாதவர்களை கடுமையாக வெளிப்படையாக விமர்சிக்க தயங்காதவர். கட்சி அமைப்புகளில் கருணாநிதி, அன்பழகன் என்கிற வரிசை இருந்தாலும் கருணாநிதிக்கு அடுத்ததாக முரசொலி மாறன்தான் கோலோச்சினார்.
முரசொலியார் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் தயாநிதிக்கு எம்.பி பதவி கொடுத்தார்; மத்திய அமைச்சர் பதவி பெற்றுக் கொடுத்தார் கருணாநிதி. ஆனால் கட்சிப் பதவிகளில் மாறன் குடும்பத்தை உள்ளே நுழைக்காமல் கவனமாகவே இருந்து வந்தார் கருணாநிதி.
அதுவும் கருணாநிதி குடும்பத்துக்குள் கலகம் ஏற்படுத்துகிற வகையில் கருத்து கணிப்பு வெளியிட போய், மதுரை தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்ட சம்பவத்தில் இந்த விரிசல் உச்சமடைந்தது. என்னதான் கண்கள் பணிக்க கருணாநிதி- மாறன் குடும்பங்கள் இணைந்தாலும் மாறன் குடும்பத்தினரிடம் இருந்து கருணாநிதி குடும்பம் கொஞ்சம் தள்ளித்தான் நின்று வருகிறது.
கருணாநிதி மறைவுக்கு பின்னர் இருந்தே திமுக கட்சிப் பதவிகள் அல்லது அறக்கட்டளைகளில் ஏதேனும் ஒன்றில் நுழைந்துவிட முடியுமா? என்பது மாறன் குடும்பத்தினரின் எதிர்பார்ப்பாக இருந்தது. இப்போது திமுக மகளிர் அணி செயலாளராக கனிமொழி, இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் இருக்கின்றனர்.மாணவர் அணி செயலாளர்?இவர்களைப் போல தங்களுக்கும் ஒரு அணியின் செயலாளர் பதவி வேண்டும் என எதிர்பார்க்கிறதாம் தயாநிதி மாறன் தரப்பு. இருந்தபோதும் ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்த பதிலும் தரப்படவில்லையாம்.
அந்த கசப்பான காலத்துக்குப் பின்னர் திமுகவுடன் வசந்த காலத்தைத்தான் மாறன் குடும்பம் பேணி வருகிறது. அதனால் கட்சி பதவி வந்தால் வரட்டும் இல்லையெனில் வழக்கம் போல செயல்படுவோம் என்கிற மனநிலையிலும் மாறன் குடும்பம் இருக்கிறது என்கிற கருத்தையும் திமுகவினரே கூறுகின்றனர்.'! (?)