கிராமப்புற ஏழை எளிய மக்கள் வாழ்வு வளம் பெற மாம்பழம் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் பென்னாகரம் சட்டமன்ற பாமக வேட்பாளர் ஜிகே மணி வேண்டுகோள்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளராக போட்டியிடும் ஜி கே மணி ஜனகராஜ் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேலப்பட்டி வணக்கம் புகலி பாடி கோடி செல்லியம்பட்டி கோவில் இருளப்பட்டி புலிகரை சங்கம்பட்டி வள்ளியூர் கொட்டாய் உள்ளிட்ட சுமார் 50 கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் அப்பொழுது அவர் பேசியதாவது கிராமபுற ஏழை எளிய மக்கள் வாழ்வு வளம் பெற அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் இக்கூட்டணி வெற்றி பெற்றால் கிராமத்திலுள்ள பெண்களுக்கு வருடத்திற்கு 6 சிலிண்டர் மற்றும் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் ரூபாய் 1500 உதவி தொகை முதியோர் உதவித்தொகை ரூபாய் ஆயிரத்தில் இருந்து 2000 ஆக உயர்வு சோலார் அடுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கும் இது தவிர மத்திய அரசுடன் இணக்கமாக உள்ளதால் பல்வேறு நலத்திட்டங்களை பெற்று அவர் தமிழ்நாட்டு மக்கள் முன்னேற்றத்திற்காக செயல்படுத்தப்பட உள்ளது 40 ஆண்டுகால வன்னிய இன மக்களின் போராட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் நன்கு உணர்ந்து வன்னிய இன மக்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கி நமது சமுதாய மக்கள் முன்னேற்ற காண உதவி புரிந்துள்ளார்கள் எனவே பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக சார்பில் போட்டியிடும் எனக்கு மாம்பழம் சின்னத்தில் உங்களது வாக்குகளை அளித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும் என பேசினார் இந்த வாக்கு சேகரிப்பில் அதிமுக சார்பில் பால்வள ஒன்றிய பெருந்தலைவர் டி ஆர் அன்பழகன் எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் ஆறுமுகம் நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் துணைத் தலைவர் பிரபு நிர்வாகிகள் பெரியசாமி உள்ளிட்ட பலர் மற்றும் பாஜக தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி மாநில மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்