நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்..

நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்.. 

நடிகை விந்தியாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய நபரை ட்விட்டரில் தெறிக்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஜெயலலிதா இருந்த போதே அதிமுகவில் இணைந்த நடிகை விந்தியா 2011, 2016 ஆகிய சட்டசபைத் தேர்தல்களில் திமுகவை எதிர்த்து கடுமையாக பிரச்சாரம் செய்தார். குறிப்பாக ஸ்டாலினை விமர்சித்து பிரச்சாரம் செய்யும் போது சிரிப்பை வரவழைக்கும்.

இதனால் இவர் அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா பிறகு கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் 2021 சட்டசபைத் தேர்தலிலும் அதிமுகவுக்கு ஆதரவாக தொகுதி தொகுதியாக சென்று பிரச்சாரம் செய்தார்.

கடும் விமர்சனம்

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் தேமுதிகவையும் கடுமையாக விமர்சித்தார். இவரது பிரச்சாரத்தில் இவர் பேசும் பஞ்ச்கள் அனைவரையும் ரசிக்க வைக்கும். அது போல் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவுக்கு ஓட்டு போட்டு திமுகவுக்கு வேட்டு வையுங்கள் என திண்டுக்கல்லில் இவர் பேசியது அப்ளாஸை அள்ளியது.

மாரடைப்பு என போஸ்டர்

இந்த நிலையில் நடிகை விந்தியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மறைந்தார் என யாரோ  திமுக விஷமிகள் சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டியுள்ளனர். இதற்கு கவலைப்படாத விந்தியா தனது கருத்துகளால் போஸ்டர் ஒட்டியவரை தெறிக்கவிட்டுள்ளார்.

இதுகுறித்து விந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல.

ஒட்டியது யார்

இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா என தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்