அமோக வெற்றி பெறப்போகும் அதிமுக ....! உற்சாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி......!

அமோக வெற்றி பெறப்போகும் அதிமுக ....! உற்சாகத்தில் எடப்பாடி பழனிச்சாமி......!!



தேர்தல் முடிந்து வாக்குப் பதிவுக்கு சுமார் ஒரு மாத இடைவெளி உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடவும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேற்கு வங்கத்தில் இறுதிகட்டத் தேர்தல் ஏப்ரல் 29ஆம் தேதி முடிந்தபின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிடலாம் என்று கூறியுள்ளது.

வாக்களித்த மக்களுக்கு இருக்கும் எதிர்பார்ப்பைவிட வாக்குகள் எந்தப் பக்கம் விழுந்துள்ளன என்பதை அறிய போட்டியிட்ட கட்சிகளுக்கு அதிக எதிர்பார்ப்பும், ஆர்வமும் இருக்கும். எனவே கட்சிகள் வெவ்வேறு தரப்பினர் மூலம் வெற்றி வாய்ப்பு குறித்து கணித்து தகவல்களைப் பெற்று வருகின்றனர். அந்த வகையில் சேலம் நெடுஞ்சாலை நகர் வீட்டிலேயே சில தினங்களாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு வந்த தகவல்கள் குறித்து விசாரித்தோம்.


எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அவர்கள் சொன்ன கருத்து எடப்பாடியை சற்று உற்சாகமாக்கியுள்ளது. பத்தாண்டு காலமாக அதிமுக ஆட்சி இருந்தாலும் 4 ஆண்டுகளாகத் தான் நீங்கள் முதல்வராக இருக்கீங்க, உங்களுக்கு பெரியளவுல எதிர்ப்பு இல்லை, மாறாக மக்கள் மத்தியில உங்க இமேஜ் உயர்ந்துருக்கு. கொங்கு மண்டலத்துல நாம தாம் வர்றோம். மற்ற மண்டலங்கள்லயும் பேசிட்டு இருக்கேன். நமக்கு வாய்ப்பு பிரகாசமா இருக்கு” என நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்துள்ளார்


.வன்னியர் உள் ஒதுக்கீடு வடக்கில் எப்படி வேலை செய்துள்ளது என்பதை அறிய ராமதாஸை தொடர்பு கொண்டாராம் எடப்பாடி பழனிசாமி. “பாமக போட்டிபோட்ட 23 தொகுதியில 12 சீட் உறுதியா ஜெயிக்கிறோம். மீத தொகுதிகள் போட்டி கடுமையா இருக்கு. இருந்தாலும் நாமதான் ஜெயிப்போம்” என பாசிட்டிவா பேசியுள்ளார். அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் இருந்தும் வடக்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு வாய்ப்பு என்ற தகவலே வந்துள்ளது.


கட்சியினர், கூட்டணிக் கட்சியினர் சொல்வதை கேட்க நன்றாகத் தான் இருக்கிறது, இருந்தாலும் பொதுவான நபர்களிடமும் கேட்டுத் தெரிந்துகொள்வோம் என அதிகாரிகள் சிலரை எடப்பாடி பழனிசாமி தொடர்பு கொண்டுள்ளதாக கூறுகிறார்கள். ஏனெனில் அடுத்து நம்ம ஆட்சி தான் என்று ஸ்டாலின் மிக உறுதியாக கூறிவருவது குறித்து எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளிடம் கேட்டுள்ளார். 


அவர் 2016 தேர்தல் சமயத்திலும் இப்போது சொல்வது போலத் தான் சொல்லிக் கொண்டிருக்கிறார். நூலிழையில் மீண்டும் அதிமுகவே ஆட்சிக்கு வரும் சூழல் நிலவுகிறது” என்று கூறியுள்ளனர்

அதிமுகவுக்கு தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் சுனில் டீம் தேர்தலுக்குப் பின்னரும் சத்தமில்லாமல் கருத்துக் கணிப்பை எடுத்துள்ளது. அந்த முடிவுகளை முதல்வரிடமும் தெரிவித்துள்ளதாம். அந்த முடிவுகளின் படி அதிமுகவுக்கு 105 இடங்கள் உறுதியாக கிடைக்கும் என்றும் 20 இடங்களில் இழுபறியாக இருக்கும் என்றும் சுனில் கூறியதாக நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல்கள் வருகின்றன. அதில் 15 தொகுதிகள் கன்ஃபார்ம் என்பது தான் சுனிலின் கணிப்பு.


இது தவிர இரு தனியார் ஏஜென்சிகள் மூலம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பை எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டதாக கூறுகிறார்கள். அந்த முடிவுகளும் எடப்பாடியின் கைக்கு சென்றுள்ளன. அதன்படி 100 தொகுதிகள் அதிமுகவுக்கு உறுதி என்று கூறப்பட்டுள்ளது. இவ்வளவு நெருக்கமாக வந்தால் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்கிறார்கள் அக்கட்சி வட்டாரத்தில்.

இவை எல்லாம் ஒருபுறம் இருப்பினும், இவர்கள் சொன்னக் கருத்துக்களை கேட்ட பின்பு, மேலும் சில தகவல்களைப் பெற்று எடப்பாடி பழனிசாமி ஒரு முடிவுக்கு வந்துள்ளார். தனது அரசியல் அனுபவத்திலிருந்து தேர்தல் முடிவை அவரும் கணித்துள்ளார். அந்த வகையில் அதிமுகவுக்கு 130 தொகுதிகள் உறுதியாக கிடைக்கும் என்பது எடப்பாடியின் கணக்கு. 


நாம் நமது மக்களாட்சியின் சார்பாக தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு பிறகு எடுத்த கருத்துக் கணிப்பில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான மக்களின் கருத்தாக இருக்கின்றது.


தமிழகமெங்கும் யாரைக் கேட்டாலும் அடுத்த வாய்ப்பு இரட்டை இலைக்கு என்றுதான் கூறுகிறார்கள். அதற்கு காரணம் அதிமுகவின் தேர்தல் அறிக்கை மற்றும் அவர்களின் மென்மையான போக்கு என்கிறார்கள்.


திமுகவின்தோல்விக்கு அவர்களின் தேர்தல் அறிக்கை மற்றும் அவர்களின் அராஜகப் போக்கு அவர்களுக்கான வாக்குவங்கியை குறைத்துள்ளது. அதுமட்டுமன்றி கட்சிக்குள்ளும் கூட்டணிக்கும் சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் யாரும் சரியாக தேர்தல் வேலை செய்யவில்லை. 

அவர்கள் வெற்று விளம்பரங்களில் மூழ்கி விட்டார்கள் வெற்றிக்கான எந்தப் பணியையும் முறையாக செய்யவில்லை இதுவே அவர்களின் தோல்விக்கு காரணம் என்கிறார்கள். 


இந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவான அலையும் வீசவில்லை அதேநேரத்தில் அதிமுகவுக்கு எதிரான அலையும் வீசவில்லை மக்கள் அனைவரும் அனைத்தையும் அமைதியாக நின்று கவனித்து வாக்களித்துள்ளனர். 


தங்களுக்கு எது தேவை என்பதை தீர்மானிப்பதற்கு நிறைய கால அவகாசமும் போதுமான விழிப்புணர்வு இந்த தேர்தலில் கிடைத்துள்ளதால் அவர்கள் தங்கள் வாக்கை சரியாக தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.


இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது எடப்பாடி காண ஆதரவுதான் அதிகமாக இருக்கிறது எனவே தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என்பது உறுதியாகத் தெரிகின்றது.


இது மே இரண்டாம் தேதி உறுதி செய்யும்.



Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்