குடும்ப கட்சிக்கு முடிவு கட்டி, மக்கள் ஆட்சி தொடர நீங்கள் வழிவகை செய்ய வேண்டும்....
ஒரு சாதாரண மனிதனாக உங்களிடம் கேட்கிறேன் மக்களே
ஊர்ந்து வந்து பதவி பெற்றேன், மத்திய அரசுக்கு நான் அடிமை, கள்ள உறவில் பிறந்தவன் நான், என்று தனிநபர் தாக்குதல் கொண்டு அவமானப்படுத்தி வருகின்றனர்.
▪️மருத்துவ படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பற்றி என்னை விமர்சித்து பேசலாமே
▪️ ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள் 13 ஸ்மார்ட் சிட்டிகள் கொண்டு வந்தேனே, என்னை விமர்சித்து கருத்து கூறி இருக்கலாமே.
▪️ நிலுவையில் நீண்டகாலமாக இருந்த காவேரி மேலாண்மை வாரியம் கொண்டுவந்ததை எதிர்த்து என்னை விமர்சித்து பேசலாமே
▪️ ஏரி குளம் குட்டை கண்மாய் அனைத்து நீர் நிலைகளிலும் தூர்வாரப்பட்டு குடி மராமத்து பணிகளை செய்தேனே அதை எதிர்த்து விமர்சனம் செய்யலாமே
▪️ விவசாய கடன் தள்ளுபடி, நகை கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவி குழு கடன் தள்ளுபடி இதையெல்லாம் செய்தேனே, இதை எதிர்த்து என்னை விமர்சனம் செய்து இருக்கலாமே.
▪️ ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விவசாயிகளுக்கு மின்சாரம் வழங்கி இருக்கிறேனே அது குறித்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ மீத்தேன் ஹைட்ரோ கார்பன் போன்ற நச்சு திட்டங்களை ஒழித்துக்கட்ட பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தேன், அதை எதிர்த்து என்னை விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ கொரானா காலத்தில் உணவு பஞ்சம் இல்லாத ஒரே மாநிலம் தமிழகம் என்று மத்திய அரசு அறிவித்தது, இதற்காக என்னை விமர்சித்து கருத்து சொல்லியிருக்கலாமே
▪️ புயல் நேரத்தில் பம்பரம் போல சுழன்று சுழன்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு மக்களின் நன்மதிப்பை பெற்றேனே, இதை எதிர்த்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ ஜல்லிக்கட்டு நடத்த கூடாது என்று உத்தரவு போட்டார்கள், அந்தத் தடையை உடைத்து ஜல்லிக்கட்டுக்கு மீண்டும் அனுமதி பெற்றுத் தந்தோமே, இதை எதிர்த்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ அத்திக்கடவு அவினாசி திட்டம் கனவாகவே போய்விடும் என்றார்கள், அதையும் மெய்ப்பித்து காட்டியிருக்கிறேன் இதை எதிர்த்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ ஜாதிக் கலவரங்கள் நடக்காமல் இருக்க உறுதியான நடவடிக்கை இதுநாள்வரை வைத்திருக்கிறேணே. இதை எதிர்த்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ வசதி படைத்தவர்கள் மருத்துவ உதவி பெறும்போது, ஏழைகளுக்கு மது கொண்டு சேர வேண்டும் என்றும் அம்மா மினி கிளினிக் கொண்டு வந்தேனே, இதை விமர்சித்து கருத்து சொல்லி இருக்கலாமே
▪️ வரலாற்று திட்டமான காவிரி குண்டாறு கற்பனையில் கூட சாதிக்க முடியாத திட்டம், செயல் வடிவத்திற்கு வந்து திட்டங்கள் திட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது, இதை எதிர்த்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ கொரோனோ காலத்தில் ஏழைகள் ஒரு நேரம் கூட பசியால் வாடி விடக்கூடாது என்பதற்காக, அம்மா உணவகங்களில் இலவசமாக இரவு பகல் பாராது உணவு அளித்தேன், இதை எதிர்த்து விமர்சனம் செய்து இருக்கலாமே
▪️ இன்னும் சொல்லிக் கொண்டே போகும் அளவிற்கு அத்தனை சாதனைகளையும் செய்திருக்கிறேன், ஆனால் நான் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் எதிர்த்துப் பேசாமல், என் மீது தனிப்பட்ட தாக்குதல் மட்டுமே நடத்துவதன் உள் நோக்கம் என்ன?
காரணம், சிலுவம் பாளையத்தில் கிளைக் கழகச் செயலாளராக இருந்து அதுவும் சாதாரண விவசாயி எல்லாம் முதலமைச்சர் ஆவதா? என்கிற ஒற்றை நோக்கம்தான்
மக்களே ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் உங்களை நம்பி மட்டுமே களத்தில் இறங்கி இருக்கிறேன், எதிரியை துரோகி ஒன்றிணைந்து அடித்தாலும் இது மக்களாட்சி என்கிற ஒற்றை நம்பிக்கையில் இத்தனை அவமானங்களையும் கடந்து உங்களை சந்தித்து ஆதரவு திரட்டி இருக்கிறேன்.
உங்கள் பேராதரவோடு நான் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேற்றால் மக்களுக்கு எது நன்மை என்பதை பார்த்து பார்த்து செய்வேன் இது திண்ணம்.
எனவே வரும் 6ஆம் தேதி குடும்ப கட்சிக்கு முடிவு கட்டி, மக்கள் ஆட்சி தொடர நீங்கள் வழிவகை செய்ய வேண்டும் என்று கூறி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.🌱🌱✌✌