பள்ளிகளை ஜூன் மாதம் திறக்க வேண்டி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனு கொடுப்போம் வாருங்கள்.........

 பள்ளிகளை ஜூன் மாதம் திறக்க வேண்டி பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு மனு கொடுப்போம் வாருங்கள்.........



 தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் உயர்மட்டக்குழு கூட்டம் 23.04.2921 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 4 மணி வரை நடைபெற்ற வீடியோ கான்பிரன்ஸ் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி வருகின்ற பத்தாம் தேதி நமது சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை தொடக்க கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு நடத்துவதாக இருந்தது...

புதிய ஆட்சி அமைந்தவுடன் நடைபெறும் முதல் போராட்டம் வரக்கூடிய புதிய அரசுக்கு நெருடலை உருவாக்கும் என்பதாலும்....

 வரக்கூடிய புதிய கல்வி அமைச்சரை நேரடியாக சந்தித்து வரவேற்று நமது கோரிக்கைகளை சொல்லி அவர்கள் செய்யவில்லை என்றால் அதற்கடுத்து போராட்டம் செய்வது என்று முடிவெடுத்திருக்கிறோம்....

 அதற்குள்  அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து பள்ளி நிர்வாகிகளையும் தனித்தனியாக சந்தித்து நமது மாநில மாவட்ட நகர ஒன்றிய சங்கத் தலைவர்கள் பேசி நமது பிரச்சனைகளை சொல்லி அவர்களை ஒருமுகப்படுத்த வேண்டும். அதற்கடுத்து மாவட்ட அளவில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மிகச்சிறப்பாக ஆயிரக்கணக்

கானோர் கலந்து கொண்டு வெற்றி பெறச் செய்வதன் மூலம் அரசின் கவனத்தை ஈர்க்கலாம்...

நமது மாநில

சங்கத்தையும்  வலுப்பெறச் செய்யலாம். எப்பொழுது யாருக்கு என்ன பிரச்சினை என்றாலும் உடனடியாக ஆயிரக்கணக்

கானோரை அந்தந்த மாவட்டங்களில் ஒருங்கிணைக்க கூடிய ஒரு அரிய வாய்ப்பை இந்த விடுமுறை  காலத்தில் உருவாக்கி தனியார் பள்ளிகள் நலனுக்காக சங்கத்தை பல படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து இருக்கின்றோம்.

அதை இன்று முதல் அனைத்து பள்ளி நிர்வாகிகளும் திட்டமிட்டு அனைவரையும் நேரிலும் தொலைபேசியிலும் பேசி  நமது சங்கத்தில் சேர்க்கவும்... நமது சங்க  வாட்ஸ் அப் குழுக்களில் இணைக்கவும் உடனடி முயற்சிகள் தொடங்கிட வேண்டும்.

 புதிய அரசு அமையும் வரை எந்தவித நீதிமன்ற நடவடிக்கைகளும் தொடர முடியாததாலும்

அரசு அதிகாரிகள் எந்த முடிவும் எடுக்க  முடியாததாலும் நர்சரி பிரைமரி பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளுக்கும் முயற்சியும்....

ஆர். டி. இ.  கல்வி கட்டண பாக்கியை பெறுவதிலும் உள்ள குறைபாடுகளைக் களையவும் காலதாமதம் ஆகிறது.  2020..21 ஆம் ஆண்டுக்கான

ஆர். டி. இ. தகவல்களை இன்னும் அனைத்து பள்ளிகளும் முழுமையாக தரவில்லை. எனவே காலதாமதம் ஆகிறது. இதற்கு முன்பு DI. BEO. DEO. CEO.  அலுவலகங்கள் செய்திட்ட காரியங்களை தற்பொழுது SSA. RMSA .. EMIS மூலம் செய்வதால் ஏற்பட்டுள்ள காலதாமதம் குறைபாடுகள் இன்னும் சரி செய்ய முடியாததால் நமக்கு வரவேண்டிய கல்வி கட்டண பாக்கியை பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது..

 இனியும் காலதாமதம் செய்தால் மீண்டும் நீதிமன்றம் சென்று நமது மாநில சங்கம் வழக்காடி உரிய கல்வி கட்டண பாக்கியை உங்களுக்குப் பெற்றுத் தருவதில் உறுதியாக இருக்கின்றோம்.

 கல்வி கட்டண நிர்ணயக் குழு நீதியரசர் திரு. பாலசுப்பிரமணியம் அவர்கள் தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கும் கல்வி கட்டணம் மிக மிக குறைத்து சென்ற ஆண்டைக் காட்டிலும்  50% குறைத்தே

கல்வி கட்டணம் நிர்ணயித்து தந்து வருகிறார். நமது மாநில சங்கத்தின் எதிர்ப்பு காரணமாக   10 சதவீதம் கல்வி கட்டணம் உயர்த்தி உள்ளார். இதுவும் போதாது எனவே ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும்  தனித்தனியாக மீண்டும் மேல்முறையீடு செய்யுங்கள் முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்து பெற்றுக்

கொள்ளலாம். அதற்காக ஒரு மாணவனுக்கு நீங்கள் வசூலிக்கும் கல்வி கட்டணம் தான் செலவாகும் கவலைப்பட வேண்டாம்.

 அதை நமது சங்கம் உங்களுக்கு நிச்சயம் வாங்கித்தரும் உடனடியாக உரிய கல்வி கட்டணம் வேண்டி கல்வி கட்டணம் நிர்ணய குழுவுக்கு மீண்டும் மேல்முறையீடு செய்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர

மாநில சங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்....

 மாநில மாவட்ட நிர்வாகிகள் வருகின்ற 4ஆம் தேதி சென்னையில் புதிய அமைச்சர்களை சந்திப்பதற்கு நேரில் வரும் வண்ணம் உங்கள் பயணங்களை திட்டமிட்டுக் கொள்ளுங்கள்....

 பள்ளி நிர்வாகிகள் அனைவரும் உடனடியாக எந்த வேலை இருந்தாலும் ஒரு ஐந்து நிமிடம் செலவழித்து உங்கள் பிரச்சனைகள் அனைத்தையும் தொகுத்து உங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும்  தரமுடியாத மாத சம்பளம் குறித்தும் அவர்கள் வாழ்வு

இழந்து நிற்பதையும் நமது அனுமதியின்றி நமது பள்ளியில் படித்த பிள்ளைகளின்  மாற்றுச்சான்றிதழ் டீசி வாங்காமல் அரசு மற்றும் இதர பள்ளிகளில்

சேர்த்துள்ள மாணவர்கள் பற்றிய EMIS 

முகவரி அடங்கிய பட்டியலுடன்

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு தலைமைச் செயலகம் ஆறாவது மாடி நாமக்கல் கவிஞர் மாளிகை, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம், புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை. 9. என்ற முகவரிக்கு. அனைத்து பள்ளி நிர்வாகிகளும் தவறாமல் உங்கள்  கோரிக்கை மனுவினை அவருடைய ஈ மெயில் முகவரிக்கு schsec@tn.gov.in அனுப்பிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும் உங்களுக்கு இருக்கக்கூடிய ஒட்டுமொத்த பிரச்சனைகளையும் தொகுத்து எழுதி அனுப்புங்கள்.

சொத்துவரி,

கட்டிட வரி,இ.எஸ்.ஐ. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கு  தரமுடியாத சம்பளம் பெற்றோர்கள் கட்டாத  கல்விக்கட்டணம் வாங்கியுள்ள கடன் செலுத்த முடியாத தவணைத் தொகை வட்டி பள்ளி வாகனங்களின் பிரச்சனைகள் உள்ளிட்ட அனைத்தையும் தொகுத்து எழுதுங்கள்.

இந்த ஆண்டாவது அனைத்து பள்ளிகளையும் அனைத்து வகுப்புகளையும்  திறப்பதை உறுதி செய்திட வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக எழுதுங்கள் ....

 அனைத்து பள்ளிகளும் அனைத்து  மாணவர்களையும்  உடனடியாக தொடர்ந்து பள்ளிகளில் சேர்ப்பதை உறுதி செய்யுங்கள் என்று அன்போடு வேண்டுகின்றோம்.

இது மிக மிக அவசரம். உங்கள் சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள நமது பள்ளிகள் திறப்பதை  உறுதி செய்துகொள்ள இந்த காரியத்தை நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

 இதுவும்  நீங்கள் செய்ய தவறினால் பள்ளிகள் நடத்துவதற்கு  நாம் தகுதியற்றவர்கள்  ஆகிவிடுவோம்...

 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு..,.தங்கம் செய்யாததை நமது மாநில சங்கம் மட்டுமே  செய்யும்.

 தனித்திருங்கள்  விழித்திருங்கள்  வீட்டில் இருங்கள்

 முக கவசம்

உயிர் கவசம்....

 என்றும் தனியார் பள்ளிகளின் நலம் நாடும் உங்கள்

கே.  ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர்.