*அரகண்ட நல்லூரில் தொடங்கியது மணல் கொள்ளை...*
*விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மணல் கொள்ளையர்களின் ஆட்டம் தொடங்கி விட்டது, இரவு நேரத்தில் டயர் வண்டிகளிலும், பகல் நேரத்தில் ஆட்கள் வழியாகவும் சட்ட விரோதமாக மணல் கொள்ளையடிக்கப்பட்டு கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம்...*
*இதற்காக, காவல் நிலையத்திற்கும் வருவாய்த்துறைக்கும் மாமூல் வழங்கப்பட்டு வருவதாக மணல் கொள்ளையர்கள் கூறுகின்றனர்*
*மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியவர்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை பார்க்கும்போது இது உண்மை என்றே தோன்றுகிறது*
*சரி, இவர்களுக்கும் மேலே உள்ள அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள், என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்*
Murugan. Reporter