ராமநாதபுரம் புல்லந்தி கிராமத்தில் அம்பேத்கருக்கு வீரவணக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் அருகில் உள்ள புல்லந்தை கிராமத்தில் அமைந்துள்ள சட்டமாமேதை டாக்டர்.அம்பேத்கரின் 130-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருஉருவச்சிலைக்கு ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க சார்பிலும்,பிற அரசியல் கட்சி சார்பிலும் மலர் மாலை அணிவித்தும் மலர்தூவியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி BJP வேட்பாளர் வழக்கறிஞர் து.குப்பு ராமு, மாவட்ட BJP தலைவர் முரளிதரன், மாநில செய்தி தொடர்பாளர் சுப.நாகராஜன், BJP மாவட்ட செய்தி தொடர்பாளர் குமரன் மற்றும் புல்லந்தை ஊராட்சி மன்ற தலைவர் சால்வதி பாக்கியநாதன் திருப்புல்லாணி ஒன்றிய அ.இ.அ.தி.மு.க துணைச்செயலாளர் பாக்கியநாதன் மற்றும் ஏராளமான BJP, அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் கலந்துகொண்டு மலர் அஞ்சலி செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வாஅலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு