ஸ்ரீமுத்துமாரியன் ஆலய ஜீரோணதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா

ஸ்ரீமுத்துமாரியன் ஆலய ஜீரோணதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா 



ராமநாதபுரம் மார்ச்-1

ராமநாதபுரம் மாவட்டம் பத்ராதரவை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியன் ஆலய ஜீரோணதாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா  நடைபெற்றது.

பத்ராதரவை கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழா சீறும் சிறப்புமாக நடைபெற்றது. 29.30.31.03.2021 ஆகிய தேதிகளில் அனுக்ஞை, விநாயகர் பூஜை, 'புண்யாகவாசனம், ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், கன்னிகா பூஜா, சுவாசினி பூஜை, இரண்டாம் கால யாகசால பூஜைகள், ஸ்ரீ துர்கா ஹோமம் உள்ளிட்ட பூஜைகளும் பூரணஹீதி தீப ஆராதணை காட்டப்பட்டது. இதனையடுத்து பக்தகோடிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு தேவதா பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடைபெற்றது இதனையடுத்து ஆரியபூஜை, கோ பூஜை, நான்காம் கால யாகசாலை பூஜைகள் ஸ்பரிசாஹீதி நாடிசந்தானம், யாத்ராதானதுடன் கடம்புறப்பட்டு அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் ஆலயத்தின் கும்பங்களில் நீர் ஊற்றப்பட்டது. இதனையடுத்து அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் மிக சிறப்பாக நடைபெற்றது. இதில்  பத்ராதரவை அதிமுக கிராம செயலாளர் வேலுச்சாமி BJP மன்மதன், சக்தி, முன்னாள் அதிமுக செயலாளர் ராமகிருஷ்ணன், ஊர்த்தலைவர் ராமமூர்த்தி,  கிராம செயலாளர் காசி விஸ்வநாதன், பருத்தி காட்டுவலசை சீனி வாசன், BJP அரசு தொடர்பு துரை காளிதாஸ், மற்றும் ஆயிரக்கணக்கான பக்தகோடிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.  இதற்காக ஏற்பாடினை கிராம பொதுமக்கள் இளைஞர் மன்றம், மகளிர் மன்றத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். ஆலய அர்ச்சகர் புதூர் K. ஜவஹர் ராமசாமி ஐயங்கார் குழுவினர் சர்வசாதகம் செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்