7 வயது சிறுமி விலை ரூ. 10 லட்சம்: சேலத்தில் 3 பேர் கைது!
சேலம் மாவட்டத்தில் 10 லட்ச ரூபாய்க்குக் குழந்தை விற்பனை செய்த விவகாரத்தில் தொடர்புடையவர்களுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் எனக் குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினர் ராமராஜ் பேட்டி அளித்துள்ளார்..
அன்னதானப்பட்டி பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை ரூ.10 லட்சத்திற்கு விற்பனை செய்ததாகப் பெற்றோர் சதீஷ், சுமதி மற்றும் தொழிலதிபர் கிருஷ்ணன் ஆகியோரை டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் ஆணைய உறுப்பினர் ராமராஜ் விசாரணை அறிக்கையை ஆணையத்திடம் தாக்கல் செய்திருந்தார். அந்த அறிக்கையில், “ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க விசாரணை அமர்வு ஒன்று அமைக்கப்பட வேண்டும்” என் பரிந்துரை செய்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி விசாரணை அமர்வு அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை தொடங்கியது. இந்த விசாரணை அமர்வில் ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ் மற்றும் மல்லிகை செல்வராஜ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் மாநகர காவல் ஆணையர்சந்தோஷ்குமார், துணை ஆணையர் சந்திரசேகரன், சிறுமி விற்பனை செய்யப்பட்ட வழக்கில் விசாரணை அலுவலர்களாகக் கூடுதல் துணை ஆணையர் கும்மராஜா, சைல்டு லைன் அமைப்பினர், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

விசாரணை கூட்டம் முடிந்த பின் மாநில குழந்தைகள் நல உறுப்பினர் ராமராஜ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “குழந்தை விற்கப்பட்டது தொடர்பான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். இந்த குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர்களுக்கு ஆணையம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அமர்வின் விசாரணையில் குழந்தை விற்பனை செய்யப்பட்டது தொடர்பான புகாரில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளது. நிறைகள் குறைகள் விசாரணையில் இருக்கிறது இதிலெல்லாம் தவறு எங்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறிக்கையாகத் தயாரித்து இன்னும் ஒரு வாரத்தில் ஆணையத்தில் தாக்கல் செய்வோம்.
இந்த விவகாரத்தில் தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றம் என்பது உண்மை அதற்கான தண்டனை நிச்சயம் வழங்கப்படும்” என்றார்.
இந்த விவகாரத்தில் தெரிந்து செய்திருந்தாலும் தெரியாமல் செய்திருந்தாலும் குற்றம் என்பது உண்மை அதற்கான தண்டனை நிச்சயம் வழங்கப்படும்” என்றார்.