தோஷம் நீங்க, 13 வயது மாணவனை திருமணம் செய்த ஆசிரியை!
நமது உலகமே அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மிகப்பெரும் மாற்றங்களை கண்ட போதிலும் இந்தியாவில் மூட நம்பிக்கைகள் மட்டும் இருந்துக்கொண்டே உள்ளன. அப்படியான ஒரு சம்பவம்தான் பஞ்சாபில் ஜலசந்தரின் பஸ்தி பாவா கெல் பகுதியில் நடந்துள்ளது.
நம் நாட்டில் உள்ள பல்வேறு மூட நம்பிக்கைகளில் மாங்கல்ய தோஷமும் ஒன்றாகும். தனது மாங்கல்ய தோஷம் காரணமாக ஒரு பள்ளி ஆசிரியை தனது பள்ளி மாணவனை திருமணம் செய்துள்ளார். மாங்கல்ய தோஷம் உள்ளவர்கள் பொதுவாக அனைவரையும் திருமணம் செய்துக்கொள்ள முடியாது. சில பிறந்த நட்சத்திரத்தை கொண்டவர்களை மட்டுமே அவர்கள் திருமணம் செய்துக்கொள்ள முடியும்.
இதே போல இந்த ஆசிரியை குண்ட்லி என்ற நட்சத்திரத்தை சேர்ந்த அவரது மாணவனை திருமணம் செய்துக்கொண்டார். ஆனால் அந்த மாணவனுக்கு வயது 13 தான் ஆகிறது. இதனால் மைனர் சிறுவனை திருமணம் செய்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டார்.
இதுக்குறித்து இந்தியா டுடே பத்திரிக்கையின் அறிக்கையின்ப்படி “எனக்கு இருந்த மாங்கல்ய தோஷம் காரணமாக எனக்கு வெகுநாளாக திருமணம் ஆகவில்லை. இதனால் எனது வீட்டார் மிகவும் கவலையடைந்தனர்” என அவர் பெண் போலிசாரிடம் கூறியுள்ளார்.
இந்த தோஷத்தில் இருந்து விடுப்பட மைனர் பையனுடன் திருமணம் செய்ய வேண்டும் என்று ஜோசியர் பரிந்துரைத்ததால் இதை செய்ததாக அவர் கூறியுள்ளார். ஜோசியரின் ஆலோசனை பேரில் அந்த ஆசிரியர் பெற்றோரிடம் ஒரு வாரம் பாடம் படிப்பதற்காக தனது வீட்டில் பையனை தங்க வைக்க வேண்டும் என கூறினார். இறுதியில் அவர் அந்த மாணவனை திருமணம் செய்துக்கொண்டார்.
வீட்டிற்கு திரும்பிய சிறுவன் முழு சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் போலிசின் காதுக்கு சென்றது. மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.
வீட்டிற்கு திரும்பிய சிறுவன் முழு சம்பவத்தையும் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் இந்த விஷயம் போலிசின் காதுக்கு சென்றது. மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்தனர்.