வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் : டிடிவி தினகரன்

  வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் : டிடிவி தினகரன்



வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும், மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும் என்றும் மீண்டும் சட்டமேலவை தமிழகத்தில் உருவாக்கப்படும் என்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிடிவி தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இந்த முறை எஸ்டிபிஐ உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து களம் காண்கிறது. 

வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், 63 பக்கத்திற்கு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.அதில் சில முக்கியமான அம்சங்களை இப்போது பார்ப்போம்:வீட்டில் ஒருவருக்கு வேலை வழங்கும் வகையில் அம்மா பொருளாதார புரட்சி திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தும் முறை மீண்டும் கொண்டுவரப்படும் 

50 நாட்களில் அனைத்து வவை கட்டடங்களுக்கும் அனுமதி தரப்படும் 60 நாட்களில் தொழில் தொடங்க அனைத்து வகையான அனுமதியும் வழங்கப்படும் அமமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் சட்டமேலவை உருவாக்கப்படும் வீடுகளுக்கே சென்று குறிப்பிட்ட தேதிகளில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் விவசாயிகளுக்கு உரம் உள்ளிட்ட இடுபொருள்களை வீடு தேடி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.முழு தேர்தல் அறிக்கையை செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ள பிடிஎப் பைலில் பாருங்கள்.'! (?)

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்