பவானியில் வீட்டிலேயே கஞ்சா செடி வளர்த்தவர் கைது.
ஈரோடு மாவட்டம் பவானி தொட்டிபாளையம் அருகே ஜல்லிக்கல் மேடு பகுதியில் கணேசன் என்பவர் இளநீர் வியாபாரம் செய்து வந்தார் அவர் தனது வீட்டின் அருகே உள்ள பள்ளத்தில் சட்டவிரோதமாக ஏழடி உயரம் ஒன்றரை கிலோ மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வந்திருக்கிறார் இதுபற்றி தகவல் அறிந்த பவானி காவல்துறையினர் கணேசன் வீட்டில் ஆய்வு செய்ததில் கஞ்சா செடிகள் இருப்பது தெரியவந்தது உடன் கணேசனை கைது செய்து பவானி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து ரிமாண்ட் செய்தனர்.