வெல்லப் போவது நானல்ல. தமிழகம். : கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்" என்று கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்டது. வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கி உள்ளது. இந்நிலையில் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டார்.அந்த பட்டியலில் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை தெற்கு தொகுதி, அதிமுக கூட்டணியில் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. எனினும் பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் களம் இறங்க போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்.
இந்நிலையில் கோவை தெற்கு தொகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமல் ஹாசனுக்கு சென்ற முறை கோவை லோக்சபா தொகுதியில் அதிகவாக்குகள் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோவை தெற்கு தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அங்கு அவர் போட்டியிடவில்லை.
இதனிடையே கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கருத்து தெரிவித்துள்ள கமல்ஹாசன் மண், மொழி, மக்கள் காக்கும் போரில் கோவை தெற்கு தொகுதியில் களம் காண்கிறேன். வெல்லப் போவது நானல்ல. தமிழகம்" என்று கூறியுள்ளார்.'! (?)