லட்சிய திமுக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை :, டி.ஆர்.ராஜேந்தர்

லட்சிய திமுக இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை ;, டி.ஆர்.ராஜேந்தர் 



இந்த தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்று அந்த கட்சி தலைவர், டி.ஆர்.ராஜேந்தர் அறிவித்துள்ளார்.

 நாடும், மக்களும் நல்லா இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று இன்று வெளியிட்ட அறிக்கையில் ராஜேந்தர் தெரிவித்துள்ளார். 

அடுக்கு மொழியில் பேசி அரசியல் களத்தை சூடாக்கி வந்தவர் டி.ஆர். ஆனால் இப்போதெல்லாம் அடுக்குமொழிக்கு வேலை இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான், இந்த தேர்தலில் ராஜேந்தரை எந்த பெரிய கட்சியும் கண்டுகொள்ளவில்லை. அவர் எந்த கட்சிக்கு ஆதரவு தரப்போகிறாரோ என்று பெரும் "எதிர்பார்ப்பு" இருந்தது. இந்த நிலையில், தனக்கே உரித்தான அடுக்குமொழி பாணியில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்T.ராஜேந்திரன். 

முன்னாள் முதல்வர், அம்மா காலத்திலிருந்து தொடங்கி இந்நாள் துணை முதல்வர், அண்ணா தி.முக.வின் ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு திரு.ஓ.பி.எஸ். அய்யா அவர்கள் என் நீண்ட நாள் நண்பர் ஆவார். நடைபெறும் இந்த 2021 சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்குவதற்கு முன்பு மாண்புமிகு ஒ.பி.எஸ் அய்யா அவர்கள் என்னை அழைத்தார், சென்றேன். மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். கையில் பூங்கொத்து ஒன்றை தந்தேன் கண்ணியமாய் விடைபெற்று வந்தேன். ம 

அம்மா அவர்கள் இல்லாமல் அண்ணா தி.மு.க. சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம் அதைப்போல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் இல்லாமல் தி.மு.க சந்திக்கின்ற முதல் சட்டமன்ற தேர்தல் களம்.

 இரண்டு கட்சிகளுக்குமே இருக்கிறது அவரவர் பலம். இதைத்தவிர கூட்டணியென்று சேர்த்திருக்கிறார்கள் பக்க பலம் அதைத் தவிர அவர்களிடத்தில் இருக்கிறது பல பலம்.

நான் என்ன செய்யப் போகிறேன்இரண்டு கட்சிகளுமே பார்த்துக் கொள்ளப்போகிறது பலப்பரிட்சை. இதில் நான் போய் என்ன செய்யப் போகிறேன் புது சிகிச்சை. 

ஒருவருடைய வாக்கு வன்மை, அவர் வார்த்தையில் இருக்கும் தன்மை, அதில் வெளிப்படும் உண்மை. அதற்கு ஒரு சக்தி இருக்கிறது என்று சில முன்னாள் முதல்வர்கள் நம்பினார்கள். அதன் அடிப்படையில் என்னை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைத்தார்கள். அது ஒரு காலம்.கொடுக்க வேண்டியதை கொடுத்துகொள்கையை சொல்லி ஓட்டு கேட்டதெல்லாம் அந்தக் காலம். கொடுக்க வேண்டியதை கொடுத்து ஓட்டு வாங்கிக் கொள்ளலாம் என்பது இந்தக் காலம். 

இப்போது காலமும் சரியில்லை , களமும் சரியில்லை. கரையில் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கலாம் என்று முடிவெடுத்து விட்டேன். பத்தும் பத்தாதற்கு இது கொரோனா காலம்.வாய்மூடிபாதுகாப்பு வேண்டுமென்றால் அணிந்து கொள்ள வேண்டும் முகமூடி. பக்குவப்பட்டவனாய் வாழ வேண்டுமென்றால் அமைதி காக்க வேண்டும் வாய்மூடி. 

இந்த சட்டமன்ற தேர்தலில் எங்கள் இலட்சிய தி.மு.க நாங்கள் யாரையும் ஆதரிக்கவும் இல்லை, அரவணைக்கவும் இல்லை. நடுநிலைமையோடு இருக்க விரும்புகிறோம். நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டுமென்று பிரார்த்திக்கிறோம். எல்லாம் வல்ல இறைவனிடம். இப்படிக்கு, டிஆர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.'! (?)

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்