சோழ மண்டல மாநாட்டுக்கு அன்போடு அழைக்கின்றோம்...... கோரிக்கைகளை வென்றெடுக்க வாருங்கள்.....!
தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சோழமண்டல மாநாடு அழைப்பிதழ்......
மரியாதைக்குரிய பள்ளி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிய வணக்கம்.
நான் தான் உங்கள் நந்தகுமார் பேசுகின்றேன்.
வருகின்ற 13. 03..2021 சனிக்கிழமை காலை சரியாக 10 மணி அளவில் நாகப்பட்டினம் சாலை திருவாரூர் காசி ரெசிடென்சி ஹோட்டலில் நமது தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சோழமண்டல மாநாடு நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் தஞ்சாவூர் நாகை மயிலாடுதுறை திருவாரூர் மாவட்ட பள்ளி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் இருகரம் கூப்பி அன்போடு அழைக்கின்றோம்.
இம்மாநாட்டில் மிக முக்கியமான பிரச்சனைகள் குறித்து பேசி நல்லதொரு முடிவெடுக்க நமது சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர். ஏ. கனகராஜ். மாநில பொதுச் செயலாளர் முனைவர் கே. ஆர். நந்தகுமார். முனைவர் சந்திரா முருகப்பன் கோ.சி. மலையரசன். இளையராஜா. ரமேஷ். ஓ எம் ஏ சாமிநாதன் அசோகன். எம்.டி. பாணி.டால்பின். கே ராஜகோபால் அய்யா வீரமணி. அட்வகேட் குமாரசாமி. அருண்குமார்.
எஸ் விஜயன் கார்த்திகேயன்
ஜி. குணசேகரன். தஞ்சை மாவட்ட தலைவர்கள் வீரமணி லண்டன் கிருஷ்ணமூர்த்தி. கும்பகோணம் செந்தில்குமார் உதயகுமார்.
ஆர். டி. பி. தாவூத் பாட்சா. அன்சாரி. மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகிகள் நபாக் பிரபாகர் ராமகிருஷ்ணா. டி. குலசேகரன் தாமரை தன்ராஜ் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றி பல்வேறு முக்கிய தீர்மானங்கள் முன்னெடுத்து....
மத்திய மாநில அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் நிகழ்ச்சி நிரலை ஒருங்கிணைத்து இருக்கின்றோம்.
அனைத்து பள்ளி நிர்வாகிகளும்
சங்க தலைவர்களும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் மேலான கருத்துக்களை சொல்லி.....
உடனடியாக பள்ளிகள் திறக்க நமக்குரிய 100 சதவீத கல்வி கட்டணம் திரும்ப பெற
நிரந்தர அங்கீகாரம் பெற பள்ளி வாகனங்களுக்கான சாலை வரி இருக்கை வரி இன்சூரன்ஸ் எஃப்.சி செய்வதில் ஓராண்டுக்கு விதிவிலக்கு பெற சொத்துவரி இ.எஸ்.ஐ. பிரச்சனை
களிலிருந்தும் டிடிசிபி பிரச்சனை களிலிருந்து முற்றிலும் விடுபட நியாயமான கல்விக்கட்டணம் அனைவருக்கும் கிடைத்திட நாம் எடுக்கும் நல்ல முயற்சியில் நீங்கள் அனைவரும் உடனிருந்து உதவ வேண்டுமாய் அன்போடு வேண்டுகின்றோம்.
உங்கள் வரவை ஆவலுடன் எதிர் நோக்கும் கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.