பள்ளிகளை திறக்க வேண்டும் பாடங்களை நடத்த வேண்டும் தமிழக முதல்வரிடம் மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை மனு .....

பள்ளிகளை திறக்க வேண்டும் பாடங்களை நடத்த வேண்டும் தமிழக முதல்வரிடம் மாநில பொதுச்செயலாளர் கோரிக்கை மனு ..... 



மாநிலபொதுச் செயலாளர் கே ஆர் நந்தகுமார் அவர்கள் தலைமையில் நமது சங்கத் தலைவர்கள் தமிழக முதல்வரை ஓசூரில் சந்தித்து வழங்கிய கோரிக்கை மனு ......

அனுப்புதல்....

கே.ஆர். நந்தகுமார் மாநில பொதுச் செயலாளர். தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம்.

க.எண்.6. ஏகாம்பரம் தெரு.. பம்மல்.Po. சென்னை. 75 .

Cell. 9443964053


பெறுதல் ....

மாண்புமிகு. தமிழக முதல்வர் அவர்கள். தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்.

புனித ஜார்ஜ் கோட்டை.

சென்னை. 9.


முகாம்.... ஓசூர் தேர்தல் பிரச்சாரம் கிளாரிடன் ஹோட்டல் காலை 7 மணி,.


 பொருள்.. தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் தேசிய முற்போக்கு கூட்டணிக்கு தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் முன்னாள் இன்னாள் மாணவர்கள் பெற்றோர்கள் ஆதரவளித்து தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்வது  சம்பந்தமாக....


 மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களுக்கு....


 தங்களின் சீரிய தலைமையின் கீழ் தமிழகத்தில் நல்லாட்சி தொடர்ந்து நடைபெற்று விவசாயிகள் தொழிலாளர்கள் விவசாய தொழிலாளர்கள் வியாபாரிகள் கல்வியாளர்கள் என அனைத்து தரப்பு மக்களும் பாராட்டும் வகையில்  மிகச்சிறப்பான முறையில் நல்லாட்சி நடத்தி வரும் தங்களை உளப்பூர்வமாக வாழ்த்துகின்றோம் பாராட்டுகின்றோம்.

 தங்களின் தலைமையில் மீண்டும் புரட்சித்தலைவி  அம்மாவின் நல்லரசு தொடர்ந்திட வேண்டும் என்பதற்காய் எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் பள்ளி நிர்வாகிகள் பள்ளியில் பயிலும் பெற்றோர்களின் விருப்பத்தை அறிந்து இதற்குமுன் நடைபெற்ற ஆட்சியின் நன்மை தீமைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான நல்லாட்சிக்கு தமிழகம் முழுவதும்  நல்லாதரவு   தந்து மாபெரும் வெற்றி வாகை சூட உதவி புரிவது என்று முடிவு செய்துள்ளோம்.

 எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கம் அன்றும் இன்றும் என்றும்

 அஇஅதிமுக தலைமையிலான கூட்டணியை ஆதரிப்பது என்று முடிவெடுத்து பணியாற்றி வருகின்றோம்.

 தெய்வ பக்தியும்

தேச பக்தியும் மிக்க உலகமே போற்றும் உத்தம தலைவர்  மத்தியில் மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள் தலைமையிலும் மாநிலத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர். எடப்பாடியார் தலைமையிலும் நிலையான நல்லாட்சி தொடர்வதை நாங்கள் உளப்பூர்வமாக வரவேற்று ஆதரித்து எங்கள் பள்ளியில் படிக்கும் லட்சக்கணக்கான பெற்றோர்கள் ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்கள் பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து எங்கள் சொந்த செலவில் அமைதியான முறையில் வீடுதோறும் பிரச்சாரங்களை மேற்கொண்டு வெற்றி பெறச் செய்வோம் என்று உறுதி கூறுகிறோம்.

 அதேவேளையில் எங்களின் கீழ்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்று எங்கள் மாநில சங்கத்தின் சார்பில் இருகரம் கூப்பி வேண்டுகின்றோம்..

 கோரிக்கைகள்....

1. அனைத்து வகை பள்ளிகளையும் வகுப்புகளையும்  உடனடியாக திறந்து பாடங்கள் நடத்த வகுப்பறை  தேர்வுகள் நடத்த உத்தரவிட வேண்டும்.

2. பள்ளி அளவிலேயே தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் போட்டு தேர்வு முடிவுகளை வெளியிட்டால் தான் மாணவனின் கல்வி சிறக்கும் என்று கல்வியாளர்கள் கருதுவதால் தேர்வுகள் நடத்தி மதிப்பெண்கள் போட்டு தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்று அன்போடு வேண்டுகின்றோம்.

3. கடந்த  ஆண்டு முழுதும்  பள்ளிகள் திறக்காமல் பாடம் நடத்த முடியாமல் கல்வி கட்டணம் வசூலிக்க முடியாமல் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டு உள்ளனர் என்பதை மனதில் நிறுத்தி அவர்களுக்கு வாழ்வாதார நிதியாக குறைந்தபட்சம் ரூ10,000 வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.

4. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும்  வழங்கும் அனைத்து வகை பயிற்சிகளும் சலுகைகளும் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பள்ளிகளுக்கும்  வழங்கிட வேண்டும்.

5. அறக்கட்டளை மூலம் நடைபெறக்கூடிய கல்விநிலையங்களுக்கு காலம் காலமாக வழங்கி வந்த

சொத்து வரியை ரத்து செய்திட வேண்டும்.

6. தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தொழிலாளர்கள் அல்ல.. எனவே தனியார் பள்ளி ஆசிரியர்கள் தொழிலாளர்கள்

 என கருதிக்கொண்டு இ.எஸ்.ஐ. கட்டவேண்டும்

என  தமிழக அரசு போட்டுள்ள  அரசாணையை  ரத்து செய்திட வேண்டும்.

7. அரசின் பெரும் பணச் சுமையை பணிச் சுமையை குறைத்து லட்சக் கணக்கானோருக்கு வேலை வாய்ப்பைத் தந்து தமிழகத்தின் பொருளாதாரத்தை உயர்த்தி எண்ணற்ற இடர்பாடுகளுக்கு இடையில் தரமான கல்வி தரும் தனியார் பள்ளிகளுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை  வழங்கும் அரசு அங்கீகாரம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கிட வேண்டும்.

8. அரசு அங்கீகாரம் பெற்று பத்து ஆண்டுகளான பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் எனும் அரசாணையை உடனடியாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

8. அரசு துவக்கப் பள்ளிகளை  நடுநிலைப் பள்ளிகளாக ஆண்டுதோறும் தரம் உயர்த்துவது போல் நர்சரி பிரைமரி பள்ளிகளையும் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தி தர  தரவேண்டும்.

10. அனைத்து வகையான  தனியார் பள்ளிகளையும் ஒருங்கிணைத்து தனியார் பள்ளிகளுக்கான சுயநிதி பள்ளிகள்  இயக்குனரகம் அமைப்பதற்கான அரசாணை வெளியிட்டு செயல்படுத்தாமல் உள்ளதை உடனடியாக செயல்படுத்தி தரவேண்டும்

என்று வேண்டுகிறோம்.

11. தனியார் பள்ளிகள் சுயநிதி கல்வி கட்டண நிர்ணயக் குழு சென்றாண்டு நிர்ணயித்த கட்டணத்தில் 50 சதவீதம் குறைத்து நிர்ணயித்து வருவதை தயவுசெய்து கைவிட்டு அரசு ஒரு மாணவனுக்கு எவ்வளவு செலவு செய்கிறதோ அதையே அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியாக கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்து தர வேண்டும் என்று வேண்டுகிறோம் அப்போதுதான் குழப்பங்களும்

வீண் அலைச்சல் பிரச்சனைகள் இல்லாமல்

சமச்சீர் கல்வி

சமச்சீர்  கட்டணம் என்பதுபோல் பெற்றோர்களும் குழம்பாமல் ஒரே மாதிரியான

 கல்வி கட்டணம் நிர்ணயிப்பதன்  மூலம் ஒரே மாதிரியான

ஆர். டி. இ.  கல்வி கட்டணம்  அனைவருக்கும்

 சரி சமமாக

 கிடைக்க ஏதுவாகும்.

12. இந்த ஆண்டு முழுக்க பள்ளி நடைபெறாததால் பெற்றோரிடம் கல்வி கட்டணம் வசூலிக்க முடியாததால் ஆசிரியர்களுக்கும் இன்னபிற ஊழியர்களுக்கும் மாத ஊதியம்

 தர முடியாததால் இந்த ஆண்டு

ஆர். டி. ஈ  கல்வி கட்டண பாக்கியை (2020..21)உடனடியாக வழங்கினால் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் வயிற்றுக்கு உணவு கிடைக்கும்.

13. கட்டிட உறுதி சான்று மற்றும்

கட்டிட உரிமைச் சான்று மூன்றாண்டுகளுக்கு வழங்குவதைப் போல் சுகாதார சான்றையும் தீயணைப்பு துறை தடையின்மைச் சான்றும்  மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை வழங்கி உதவிட வேண்டும்.

14. தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும்

மும்மொழி கல்விக் கொள்கை திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

15. தமிழகத்தில் நிலுவையிலுள்ள மத்திய அரசின்  நவோதயா

பள்ளிகளை துவக்குவது  மூலம் தமிழர்கள் அனைவரும்  பயனடைவார்கள்.  எனவே உடனடியாக நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்கிட நடவடிக்கை எடுத்திட  வேண்டும் என்று வேண்டுகிறோம்.

16. தமிழகத்தில் அமுல்படுத்தப்படும் அனைத்து  கல்வி சார்ந்த  சட்டங்களும் திட்டங்களும் தனியார் பள்ளி மாணவர்களுக்கும் பொருந்தும் வண்ணம் சரி  செய்ய வேண்டும். அனைத்து தனியார் பள்ளி மாணவர்களும்  மாணவிகளும் அரசின் பாட புத்தகம் படிக்கும்போது அரசின் அனைத்து அரசு பள்ளி மாணவர்களை போலவே ஒரே மாதிரி தேர்வு, கேள்வித்தாள், விடைத்தாள் மதிப்பெண்கள் தேர்வு முடிவுகள் தேர்வுத் துறையால் வெளியிடப்படும் போது தமிழகஅரசின்  திட்டங்களும் அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும்.. குறிப்பாக மருத்துவ உள் ஒதுக்கீட்டில் 7.5% மற்றும் டி.என்.பி.எஸ்.சி. 20 சதவீதம் உள் ஒதுக்கீட்டிலும் தனியார் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் செய்ய வேண்டும். ஏனென்றால் தனியார் பள்ளிகளில் படிக்கும்  அனைவரும்  தமிழர்கள்.  அவர்கள் அனைவருக்கும்

சம கல்வி

 சம வாய்ப்பை வழங்கிட வேண்டும். தனியார் பள்ளிகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட கிராமப்புற ஏழை எளிய  மாணவர்கள் படித்து வருகிறார்கள் என்பதை மனதில் நிறுத்தி  அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்ய  வேண்டும்.  

17. தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் டெட் TET தேர்வில் தேர்ச்சி பெற்று TRB டிஆர்பி வேலைக்கு செல்லும்போது தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து.... அதற்கான அனுபவ சான்று இருக்குமானால்  10 மதிப்பெண்கள் கூடுதலாக கொடுத்து அவர்கள் அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து வகை தனியார் பள்ளி ஆசிரியர்கள்  சார்பாக வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.

18. அமைப்புசாரா தொழிலாளர்கள்

 நல வாரியம் உள்ளதுபோல் ... தனியார் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்கள் ஆசிரியர் அல்லாத பிற ஊழியர்களுக்கும் தனியார் பள்ளிகளுக்கான

நல வாரியத்தை அமைக்க வேண்டும் என்று பணிவோடு வேண்டுகின்றோம்.

19. சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க தடையின்மைச் சான்று பள்ளிக்கல்வித்துறையில் பெறவேண்டும் என்றும் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் புதுப்பிக்க 

 வேண்டும் என்பதால்  அதனால் லஞ்ச லாவண்யம் பெறுகிறது என்பதை கருத்தில் கொண்டு அரசுக்கு நல்ல பெயர் வேண்டும் என்றால் மற்ற மாநிலங்களைப் போல் எந்த வித நிபந்தனையும் நிர்ப்பந்தமும்  இல்லாமல்  சி.பி.எஸ்.இ.

என்.ஓ.  சி.

மற்றும்  தொடர் அங்கீகார ஆணையை வழங்கிட வேண்டும்.

20. அனைத்துவகை பள்ளிகளில் தொடர் அங்கீகாரத்தை ஆன்லைன் மூலம் வழங்குவதாக அரசு ஆணை போட்டு இதுவரை அவ்வாறு வழங்காமல் இழுத்தடித்து பல்வேறு இடர்பாடுகளை பள்ளி நிர்வாகிகளுக்கு வழங்கி அரசுக்கு தொடர்ந்து அவப்பெயரை உருவாக்கி வருவதால் உடனடியாக அனைவருக்கும் துவக்க  அங்கீகாரம் தொடர்  அங்கீகாரம் புதுப்பித்தல் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் வழங்கிட வழிவகை   செய்துள்ள  அரசாணையை உடனடியாக அமுல் படுத்தப்பட வேண்டும்.

 மேற்கண்ட எமது நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தருவது மூலம் தமிழகத்தில் வெளிப்படையான நல்லாட்சி நடைபெறுவதை உறுதி செய்ய முடியும் அனைத்துவகை பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் அனைவரும் எடப்பாடி அவர்கள் நல்லாட்சிக்கு என்றும் உறுதுணையாக இருக்க கற்றலும் கற்பித்தலும் சிறக்க இப்பேரூதவியை செய்திட வேண்டும் என்று எங்கள் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சார்பில் பணிவோடு கேட்டுக்கொள்

கிறோம்.

தங்கள் உண்மையுள்ள

கே. ஆர். நந்தகுமார் மாநில பொதுச்செயலாளர்.

 பேராசிரியர். ஏ. கனகராஜ் மாநில தலைவர்.

 முனைவர் ஆர். நடராஜன் மாநில பொருளாளர்.

 இடம்...ஓசூர்.

 நாள்.22.03.2021.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்