பிரபலங்களை எதிர்த்து நிற்கும் வேட்பாளர்கள்
சொல்லிவைத்தார் போல் பல அமைச்சர்களுக்கு வலுவான ஸ்கெட் போட்டிருக்கிறது திமுக. அக்கட்சியின் தலைவ்ர ஸ்டாலின், அதிமுகவின் முக்கிய அமைச்சர்களான துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி, சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் உள்ளிட்டோருக்கு எதிராக மிகமிக சவாலான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுகவில் முதல்வர் துணை முதல்வர் உள்பட மொத்தம் 25 அமைச்சர்களுக்கு எதிராக திமுக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அவர்கள் அனைவரையும் தோற்கடிக்க நேரடியாக வியூகம் வகுத்துள்ளார் ஸ்டாலின். நிச்சயம் இதில் எத்தனை அமைச்சசர்கள் பதிலடி கொடுத்து எம்எல்ஏக்கள் ஆவார்கள் என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும் தற்போது அமைச்சர்களை எதிர்த்து போட்டியிடும் வேட்பார்கள் பட்டியலை பார்த்துவிடுவோம்,
3 பேருக்கு மிகவும் சவால்அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்த இடத்தில் உள்ளவர் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம். இவரை எதிர்த்து போடியில் திமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் நிறுத்தப்படுள்ளார். இதேபோல் கோவை தொண்டாமுத்தூரில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணியை எதிர்த்து கார்த்திகேய சேனாதிபதி நிறுத்தப்பட்டுள்ளார். கார்த்திகேய சேனாதிபதி கோவையில் மிகவும் பிரபலம் ஆனவர். திமுகவின் சுற்றுச்சூழல் அணி தலைவராக உள்ளார்.
இதேபோல் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு எதிராக முன்னாள் எம்.பி லட்சுமணன் நிறுத்தப்பட்டுள்ளார். அதிமுகவில் விழுப்புரம் வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளராக இருந்த இவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஸ்டாலின் முன்னிலையின் திமுகவில் இணைந்தவர். பண பலம் மற்றும் செல்வாக்கு மிக்க நபரான இவரால் சிவி சண்முகத்தை எதிர்த்து பலமாக மோதமுடியும் என்று கூறப்படுகிறது
திமுக வேட்பாளர்கள்இதற்கிடையே முதல்வர் துணை முதல்வர் உள்பட மொத்தம் 25 அமைச்சர்களுக்கு எதிராக திமுக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது.அவற்றின் விவரத்தை இப்போது பார்ப்போம். 1 எடப்பாடி - பழனிசாமி - சம்பத் குமார் 2 போடி - ஓ. பன்னீர்செல்வம் - தங்க தமிழ்ச்செல்வன் 3. ராயபுரம் - ஜெயக்குமார் - ஐட்ரீம் இரா.மூர்த்தி 4. ஆவடி - பாண்டியராஜன் - சா.மு.நாசர் 5. மதுரவாயல் - பென்ஜமின் - காரப்பாக்கம் கணபதி 6. விழுப்புரம் - சி.வி சண்முகம் - லட்சுமணன் 7. கடலூர் - எம்.சி. சம்பத் - கோ.அய்யப்பன் 8. ஆரணி சேவூர் ராமச்சந்திரன் - எஸ்.எஸ் அன்பழகன் 9. ஜோலார்பேட்டை கே.சி. வீரமணி - க. தேவராஜி 10. ராசிபுரம் (தனி) - சரோஜா - மதிவேந்தன்வேலுமணி11. பாலக்கோடு- கேபி அன்பழகன் - பிகே முருகன் 12. குமாரபாளையம் தங்கமணி - எம்.வெங்கடாசலம் 13. வேலுமணி - தொண்டாமுத்தூர் - கார்த்திகேய சேனாதிபதி 14. கோபிசெட்டிபாளையம் - செங்கோட்டையன் - ஜி.வி. மணிமாறன் 15. பவானி - கருப்பணன் - கேபி துரைராஜ் 16. கரூர் - எம்ஆர் விஜயபாஸ்கர் - செந்தில் பாலாஜி 17. திருச்சி (கிழக்கு) - வெல்லமண்டி நடராஜன் - முனைவர் இனிகோ. இருதயராஜ் 19. விராலிமலை - சி.விஜயபாஸ்கர் - பழனியப்பன் 20. மதுரை (மேற்கு) - செல்லூர் ராஜு - சின்னம்மாள் 21. திருமங்கலம் - ஆர்.பி. உதயகுமார் - மு. மணிமாறன்.ராஜேந்திர பாலாஜி22. வேதாரண்யம் - ஓஎஸ் மணியன் - வேதரத்தினம் 23. நன்னிலம் - காமராஜ் - ஜோதிராமன் 24. ராஜபாளையம் - ராஜேந்திர பாலாஜி - சௌ.தங்கபாண்டியன் 25. சங்கரன்கோவில் (தனி) - ராஜலெட்சுமி - ஈ.ராஜா அமைச்சர்களுக்கு எதிராக சொல்லி வைத்தார் போல் திமுக பலமான வேட்பாளர்களையே நிறுத்தி உள்ளது. இந்த தேர்தலில் வென்று யாரெல்லாம் மீண்டும் எம்எல்ஏக்கள் ஆகபோகிறார்கள் என்பது மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை முடிவின் போது தெரிந்துவிடும்.'! (?)