புதுவிதமாக எடப்பாடியார் நடத்திய நேர்காணல்

புதுவிதமாக எடப்பாடியார் நடத்திய நேர்காணல்



அதிமுக வேட்பாளர்கள் தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தியதுதான் இப்போது அந்த கட்சியின் ஹாட் டாபிக்காக இருக்கிறது. 

அதிமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. பாமக, பாஜகவுடன் தொகுதி எண்ணிக்கை பங்கீடும் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தேமுதிகவுடன் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.அதிமுக வேட்பாளர் பட்டியல்இந்த நிலையில்தான் ஈபிஎஸ், ஓபிஎஸ் உட்பட 6 பேர் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக அதிரடியாக அறிவித்து பரபரப்பை கிளப்பியது. 

இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர்களுடன் அதிமுக தலைமை கழகத்தில் ஈபிஎஸ், ஓபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர்.மா.செக்களுக்கு நேர்காணல்இந்த ஆலோசனையின் போது மாவட்ட செயலாளர்களிடம் ஒவ்வொரு தொகுதியிலும் 3 பேர் பட்டியலை கொடுத்துள்ளனர். 

அந்த 3 பேரின் ஜாதி பலம், பண பலம், சொந்த செல்வாக்கு குறித்து மாவட்ட செயலாளர்களிடம் ஓபிஎஸ், ஈபிஎஸ் கேட்டறிந்தனர்.திமுக வேட்பாளர்அத்துடன் இந்த தொகுதியில் திமுக வேட்பாளராக அந்த நபர் போட்டியிட்டால் அவரை இவரால் எதிர்கொள்ள முடியுமா? ஜெயித்துவிடுவாரா? எனவும் மாவட்ட செயலாளர்களிடம் கேட்டிருக்கின்றனர்.

 கடைசியாக உங்கள் சாய்ஸில் யாருக்கு கொடுக்கலாம் என்ற பதிலையும் கேட்டு வாங்கி இருக்கின்றனர்.சிலாகிக்கும் மா.செ.க்கள்அதிமுகவில் ஒரே நாளில் 8,000 பேருக்கு மேல் நேர்காணல் நடத்தினர். அதனையடுத்து மாவட்ட செயலாளர்களிடம் புதுவிதமாக எடப்பாடியார் நடத்திய நேர்காணலை சிலாகிக்கின்றனராம் அதிமுக மாவட்ட செயலாளர்கள்.'! (?)

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்