தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசிய ராசாவை கைது செய்ய வேண்டும் ; தேர்தல் ஆணையத்தில் புகார் .

தமிழக முதல்வரை தரக்குறைவாக பேசிய ராசாவை கைது செய்ய வேண்டும் ;  தேர்தல் ஆணையத்தில் புகார் .



தரக்குறைவாக பேசி பிரசாரம் செய்து வரும் அ. ராசாவை தேர்தல் பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 முதல்வரை அவதூறாக பேசிய ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யா பிரதா சாகுவிடம் அதிமுக சார்பில் புகாரளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. அதையொட்டி அரசியல் கட்சியினர் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பியுமான அ.ராசா ஆயிரம் விளக்குத் தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைப் பற்றி தரக்குறைவாக பேசி பிரசாரம் செய்தார் என்பது புகார்.ராசாவின் பேச்சுக்கு திமுக மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் அ. ராசா மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.

 தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி பிரசாரத்தில் பேசி வரும் அ. ராசா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் தேதி அ. ராசா பிரசாரம் செய்த போது முதல்வரை அவமாரியதை செய்யும் வகையில் பிரசாரம் செய்துள்ளார். ஏற்கனவே அவர், முதல்வர், துணை முதல்வரை அவமரியாதை செய்யும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 அதிமுக மாநில வழக்கறிஞர் அணி இணைச்செயலாளர் சி. திருமாறன் அளித்த புகாரின், அதிமுக கட்சித்தலைவர்களை தொடர்ந்து அவமரியாதை செய்யும் வகையில் அ. ராசா தொடர்ந்து பேசி வருகிறார். தேர்தல் பிரசாரத்தில் மீண்டும் அ. ராசா ஆபாசமாக அவதூறாக பேசி வருவது தேர்தல் நடைமுறைக்கு எதிரானது.எனவே திமுக துணை பொதுச்செயலாளர் அ. ராசா மீது தேர்தல் நடத்தை விதிமுறைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் மீது இந்திய தண்டனைச்சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதுடன், இனிவரும் காலங்களில் அவர் எந்தவித தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடாத வகையில் நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சத்யபிரதா சாகுவிற்கு சி. திருமாறன் அளித்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.'!