ராமநாதபுரம் மார்ச்- 29
ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில் யாக பூஜை நடத்தினார் சசிகலா
ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை 4.மணி அளவில் தஞ்சாவூரிலிருந்து கார் மூலமாக சசிகலா ராமேஸ்வரம் வருகை தந்தார். அவர் பேருந்து நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கினார். ராமேஸ்வரம் செல்லும் வழியில் ராமநாதபுரம் ECR சாலைக்கு வருகை தந்த சசிகலாவிற்கு ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் G.முனியசாமி தலைமையில் அ.ம.மு.க கட்சியினர் சிறப்பான வரவேற்பளித்தனர்.
.இதனைதொடர்ந்து மாலை 6.மணி அளவில் ராமேஸ்வரத்திலிருந்து திருப்புல்லாணி ஆகி ஜெகநாத பெருமாள் கோவிலுக்கு காரில் சென்றார். இரவு ராமேஸ்வரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கினார். இன்று அதிகாலை 5. மணிக்கு ராமேஸ்வரம் கோவிலில் ஸ்படிக லிங்கம் தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் சிரிங்கேரி மடத்தில் நடைபெற்ற சிறப்பு யாகபூஜையிலும் கலந்துகொண்டார். ராமேஸ்வரம் வருகை தந்த சசிகலாவை, முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் G.முனியசாமி, திருவாடானை தொகுதி வேட்பாளர் வ.து.ந ஆனந்த், முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி அ.ம.மு.க வேட்பாளர் முருகன் ஆகியோர் சசிகலாவை சந்தித்து பேசினர். இதனையடுத்து ராமேஸ்வரத்திலிருந்து கோவில்பட்டிக்கு சாமிதரிசனம் செய்ய காரில் ராமநாதபுரம் வருகை தந்தார். அவரை ECR சாலையில் ராமநாதபுரம் வேட்பாளர் முனியசாமியும், முதுகுளத்தூர் வேட்பாளர் முருகனும் சால்வை அணிவித்து வழி அனுப்பி வைத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி N.A. ஜெரினா பானு