இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஏன் ஜெயிக்கிறது .....! திமுக கூட்டணி ஏன் தோற்கிறது.....? ஒரு சிம்பிள் கால்குலேஷன்

இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி ஏன் ஜெயிக்கிறது .....! திமுக கூட்டணி ஏன் தோற்கிறது.....? ஒரு சிம்பிள் கால்குலேஷன்



2016 சட்டமன்றத் தேர்தலில் கட்சிகள் எவ்வாறு வாக்களித்தன என்பதை சதவிகிதத்தில் பார்ப்போம், இது 2021 தேர்தலுக்கு ஏற்ப மாற்றியமைத்து இருக்கிறேன்.

அதிமுக  40.8 % வாக்குகளைப் பெற்றது

திமுக 31.6 %

காங்கிரஸ் 6.4 %

பாமக 5.3 %

தேமுதிக 2.4%

பாஜக 2.8%

சிபிஐ 0.8%

சிபிஎம் 0.7%

வி.சி.க 0.8%

தாமக 0.5%

மதிமுக 0.9%

மிவிஹிலி 0.7%

எம்.எம்.கே 0.5%

புதிய தமிழகம் 0.5%

தற்போதைய கூட்டணிக்கு ஏற்ப இந்த  வாக்குப் பங்கை பிரிப்போம்.

அதிமுக, பாமக, பாஜக, தமாகா மற்றும் பி.டி ஆகியவை  என மொத்தம் 49.9%

அதேசமயம் திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், வி.சி.க, மதிமுக, ஐ.யூ.எம்.எல், எம்.எம்.கே மொத்தம் 42.4%

இது அதிமுக கூட்டணிக்கு நேரான வெற்றியாகத் தெரிகிறது.

ஆனால் 2016 க்கு பின்னான விளைவுகளால் பின்வரும் விஷயங்களையும் கவனிக்க வேண்டும் என்று கருதப்படுகிறது

கமலின் மக்கள் நீதி மய்யம், அதிமுக, திமுக இரண்டு பக்கமும் 2% சதவித வாக்கை பிரிக்கும். 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.

அதே போல நாம் தமிழர் சீமானும் இரண்டு பக்கமும் 2% சதவித ஓட்டை பிரிப்பார். இவரும் 3 முதல் 5 சதவிகித நடுநிலை வாக்காளர்கள் வாக்கைப் பிரிப்பார்.

பாஜக வின் வாக்கு சதவிகிதம்  6% முதல் 10% ஆக உயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது

 ஆனால் குறைநிலையாக 6% மட்டும் எடுத்துக் கொள்வோம்.



இப்போது புதிய கணக்குகளை அடுக்குவோம் .

அதிமுக மொத்தம் 49.4

கழித்தல்

கமல் -2%

சீமான் -2%

நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்

மொத்தம் – 9%

இப்பொழுது

அதிமுக 49.4 – 9 = 40.4%

அதிமுக 40.4%

கூட்டல்

பாஜக + 6%

அதிமுக இறுதி

40.4 + 6 = 46.4

அதிமுக மொத்த வாக்கு சதவிகிதம் 46.4

இப்ப திமுக,

திமுக 42.4%

கழித்தல்

கமல் -2%

சீமான் -2%

நடுநிலை வாக்காளர்கள் -5% மாற்றம்

மொத்தம் – 9%

திமுக இறுதியாக 42.4 – 9 = 33.4

மொத்தம் 33.4%

2016 தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்ட நிலையில் முக்கியமான 77 தொகுதிகளில் பாமக பெற்ற வாக்கு விவரங்களை பார்த்தால், 77 தொகுதிகளில் அதிமுக 29 தொகுதிகளில் தோல்வியுற்றது, இப்பொழுது இரண்டும் இணையும் பொழுது அது மிக உறுதியாக அதிமுகவுக்கு வெற்றி தருகிறது.

இந்த பகுப்பாய்வு மூலம் மக்கள் சாதாரணமாக வாக்களித்தாலே அதிமுக கூட்டணி வெற்றி பெறும்.

அதிமுக வுக்கு மிக சாதகமான விஷயம்  பாமகவின் வாக்குப் பங்கு, இது கடந்த 5 தேர்தல்களிலும் நிலையானது. அதில் நடுநிலை வாக்காளர்கள் இல்லை. பாமக விசுவாசிகள்  சேதமில்லாமல் முழுதாக வாக்களிப்பார்கள். இதை அறிந்தே அதிமுக பாமக உடனான கூட்டணியை முதலில் முடித்தது.

அடுத்த விஷயம் பாஜக வுக்கு சமீப காலங்களில் அதிகரிக்கப்பட்ட வாக்கு வங்கி. இது எல்லா கட்சிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இது நடு நிலையாக மதிப்பிட்டாலே அதிமுகவுக்கு 44% வாக்குகள் கிடைக்கும்.

 திமுக தோல்வியே காணும்.

இந்த கடினப் போட்டியில் அமமுக தேமுதிக இருபக்கமும் ஏற்படுத்தும் தலா 1% இழப்பு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.

நான்கு முனை போட்டியில் இப்போதைய சூழலில்  சிறுபான்மையினர் வாக்குகள் சமமாக விழும்.

இறுதி நேரத்தில் ரஜினி யார் பக்கமாவது வாய்ஸ் கொடுத்தால் அந்த பக்கம் 3 – 5 சதவிகிதம் வாக்குகள் விழும்.

இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அதிமுக வெற்றி காரணங்கள்

1.  அதிமுக வுக்கு எதிராக எந்த குறையோ அல்லது எதிர் அலையோ இல்லை.

2.  நடுநிலை வாக்காளர்களின் வாக்குகள் அதிமுக வுக்கு அதிகம் திரும்பியிருக்கின்றன.

3  பிரிவினை இல்லாத கட்டமைப்பை அதிமுக தலைவர்கள் காட்டியிருக்கிறார்கள்.

4. குழப்பமில்லாமல் திட்டமிட்டு நேர்த்தியாக தேர்தலை அணுகுகிறார்கள்.

5. எல்லா தேர்தல் அறிக்கைகளிலும் சிறந்ததாக, வாக்கு வாங்கி தரும் வகையில் அதிமுக தேர்தல் அறிக்கை இருக்கிறது.

திமுக தோல்வி காரணங்கள்.

1. கலைஞரின் ஆளுமையை கட்சியால் நிரப்பமுடியவில்லை. நான்கு வருடங்களிலும் அதிமுக ஆட்சியைக் கலைக்க முடியவில்லை. அது திமுக வின் தந்திரமின்மையை சக்தியின்மையைக் காட்டுகிறது 

2. மேல் மட்ட தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. துரைமுருகன் டி ஆர் பாலு போன்றோர் சற்று தள்ளி இருந்தே பட்டும் படாமல் வேலை செய்கிறார்கள்.

3. பிரசாந்த் கிஷோரை நம்பி தன் பாரம்பரிய தேர்தல் ஸ்டைலை திமுக கைவிட்டது. அது தலைவர்கள் தொண்டர்கள் இடையே பெரும் இடைவெளியை ஏற்படுத்தி இருக்கிறது.

 4. பிரசாந்த் கிஷோர் ஏதாவது மேஜிக் செய்வார் என்று பார்த்திருக்க, தலைமுடி மாற்றுதல், வயலில் போட்டோ, நாடகத் தனமான குறைகேட்பு என ஒரு விளம்பர கம்பெனி வேலைகளைத்  தான் செய்தார். இறுதியில் நான் வெற்றி தோல்விக்கெல்லாம் பொறுப்பாளி இல்லை, ஆலோசகர்தான் என்று ஒதுங்கிக் கொண்டார்.

5. மோசமான வேட்பாளர் தேர்வு. கிக்ஷோரின் வேட்பாளர் பட்டியல், மூத்த தலைவர்களின் வேட்பாளர் பட்டியல், ஸ்டாலின் அவர்களின் வேட்பாளர் பட்டியல் என மூன்று பட்டியல்கள் உலா வந்தன. கவர்ச்சியில்லாத தேர்தல் அறிக்கை.

6.  கடைசி நொடியில் நடப்பது நடக்கட்டும் என்று பயத்தில் கண்ணை மூடிக் கொண்டு ஆக்ஸிலேட்டரை முறுக்குவது போல திமுக வின் போக்கு இருக்கிறது.

7. திமுகவில் உள்ளவர்களே கட்சி வேட்பாளர்களை கவிழ்க்கும் முயற்சி ஆங்காங்கே நடைபெற்று வருகிறது.

8. திமுகவில் உள்ளவர்களின் வாய் சுத்தமானதாக இல்லை எங்கேயாவது சென்று ஏதாவது ஒன்று பேசி மக்களின் அதிருப்தியை பெற்று வருகின்றனர்.

இதுவெல்லாம் திமுகவின் செல்வாக்கை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. அதுமட்டுமல்ல இவர்கள் நாள்தோறும் வெளியிட்டு வருகின்ற இவர்களுக்கு சாதகமான தேர்தல்அறிக்கை இவர்களை படு சோம்பேறி ஆக்கி வைத்துள்ளது

மொத்தத்தில் இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு வங்கியும் குறைந்துள்ளது வாக்கு வன்மையும் மக்களின் நம்பிக்கையும் குறைந்து வருகிறது எனவே இவர்கள் படுதோல்வி அடைவது நிச்சயம்.