பத்திரிகையாளர்களை அவமதிக்கும் வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகனை உடனடியாக பணியிடமாற்றம் செய்...!
*பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவமதிக்கும் வேலூர் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் திரு சு.மோகன் அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய வேண்டும் !*
*தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களூக்கு வேண்டுகோள் !*
*வேலூர் மாவட்டம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் தொடர்பு அலுவலர்கள் செய்தியாளர்களை, உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்றும், பெரிய சேனல் சிறிய பத்திரிகைகள் என்றும், பாகுபடுத்தி தரம் பிரித்து அவர்களுக்குள் வேற்றுமையை காண்பிப்பத்து செயல்படுகின்றனர் ! இது அரசு செய்யும் வேலை அல்ல !*
*பத்திரிகையாளர்களை மூத்தவர் இளையவர் என்று கூட அழைக்கலாம், ஆணால் இவர் பாகுபாடோட நடந்து கொள்கிறார் !*
*திரு சு.மோகன் அவர்கள், செய்தியாளர்களை வேறுபடுத்தி இழிவுபடுத்தி பேசி வருவது, அதுவும் ஒரு மக்கள் தொடர்பு அலுவலரின் பணிக்கு, ஜனநாயக முறைக்கும், சட்ட விதிமுறைகளுக்கு முரணானதாகும் !*
*குறிப்பாக வேலூர் மாவட்ட பி.ஆர்.ஓ இதுபோன்ற செயல்களில் பதவி ஏற்ற நாளிலிருந்து தொடர்ந்து செயல்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது !*
*குறிப்பாக வேலூரில் நேற்று முன்தினம் ஜனாதிபதி அவர்களின் வருகையின் போது, அரசு விழாவில், 60 % பத்திரிகையாளர்களை, அனுமதிக்காமல் போனது மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது !*
*நிறுவனங்கள் கொடுக்கும் கடிதங்களை வாங்க மறுப்பது, வாங்கிய பின் அதை இழிவுபடுத்தி விமர்சனம் செய்வது, மிகவும் வருந்தத்தக்க செயலாகும் !*
*செய்தியாளர்களை அறையில் அனுமதிப்பதில் கூட பாகுபாடு காட்டுவது, மிக தவறான செயலாகும் !*
*இதுபோன்ற மக்கள் செய்தி அலுவலர்கள் இப்படி நடந்துகொண்டால் பொது மக்களுக்கும் அரசுக்குமான நெருக்கத்தை இவரால் ஏற்படுத்த முடியாது என்பதை தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் தேர்தல் ஆணையர் அவர்களுக்கு வலியுறுத்திகிறது !*
*இது போன்றவர்களை பணியிடமாற்றம் செய்ய வேண்டும் என்றும், புதிய செய்தி தொடர்பு அலுவலரை உடனடியாக நியமிக்குமாறும் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம் !*
*தேர்தல் பணியில் ஈடுபடும் வேலூர் மாவட்ட பத்திரிகையாளர்களுக்கு உரிய மரியாதை வழங்கும் வகையில் உடனடியாக வேறு ஒருவரை பணியில் அமர்த்தி பஸ் பாஸ், அடையாள அட்டைகள், தாலுகா வாரியாக வழங்க வேண்டும் என்று தோழமையுடன் கேட்டுக் கொள்கிறோம் !*
*அரசு வழங்கும் பத்திரிகையாளர் அடையாள அட்டை இதுவரை வழங்காமல் இருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது !*
*இதே நிலை நீடித்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் !*
*தோழமையுடன்*
*டி.எஸ்.ஆர்.சுபாஷ்*
*மாநில தலைவர்* *தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ( TUJ )*