முக ஸ்டாலினை கலாய்க்கும் கமல்ஹாசன்.

முக ஸ்டாலினை கலாய்க்கும் கமல்ஹாசன்.

எழுதிக் கொடுப்பதை தப்பு இல்லாமல் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வரிடம் வாசித்து காட்ட வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சவால் விடுத்துள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் நேற்று இரவு பிரச்சாரம் செய்தார் கமல்ஹாசன். இது திமுக தலைவர் ஸ்டாலின் தொகுதி என்பதால் கமல்ஹாசன் பிரச்சாரத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

அதேபோல, ஸ்டாலினை விமர்சனம் செய்ய தவறவில்லை கமல்ஹாசன். ஊழலுக்கு ஒத்து ஊதுவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

 சதி

பிழையாக படித்து விடாதீர்கள்

கமல்ஹாசன் பேசியதாவது: ஸ்டாலின் சொல்கிறார்.. நான் எதிர்க்கட்சித் தலைவராக ஒரு விஷயம் சொன்னால், முதல்வர் அதை செய்து விடுகிறார் என்று. "அற்புதம்.. ஜனநாயகம் வாழ்கிறது என்பதற்கான பேராதாரம் கிடைத்து விட்டது.." அப்படியானால், அத்தோடு நான் ஒரு நோட்டு கொடுக்கிறேன். அதை "பிழையாக படித்து விடாதீர்கள்.. கரெக்டா படிங்க."

லோக்பால் கொண்டுவரச் சொல்லுங்க

நீங்கள் சொல்ல வேண்டியது என்ன என்பதையும் நானே எழுதி கொடுத்து விடுகிறேன். ஊழலுக்கு இடம் கொடுக்காத வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர சொல்லுங்க பார்ப்போம். இருக்குற டாஸ்மாக் கடைகளில் பாதியையாவது மூட சொல்லுங்கள் பார்ப்போம்.

மணல் திருட்டுக்கு எதிராக பேசுங்க

ஆற்றுமணல் திருடுவதை நிறுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம். தசாவதாரம் திரைப்படத்தில் ஆற்றுமணல் கொள்ளை பற்றி காட்சி வைத்து இருப்போம். அதை எடுப்பதற்கு சற்று தாமதம் ஆனது. அப்போது இந்த விஷயத்தை கேள்விப்பட்டு பாராட்டு சொன்னார்கள். பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு மணல் கொள்ளை பற்றி ஏன் படம் எடுத்தீர்கள் என்று என்னிடமே கேட்டார்கள். ஆட்சிக்கு வந்தால் தங்களுக்கு இடையூறு என நினைக்கிறார்கள்.

ஸ்டாலின் செய்ய மாட்டார்

கல்குவாரி மலைகளை மொட்டை அடிப்பதை நிறுத்த சொல்லுங்கள் ஸ்டாலின் அவர்களே.. இ-டெண்டரில் கள்ளத்தனம் செய்து மாமன், மச்சான் எல்லோருக்கும் ஒப்பந்தம் கொடுக்கிறார்களே, அதை நிறுத்தச் சொல்லுங்கள் பார்ப்போம். சொல்ல மாட்டீர்கள்.. அடுத்து நம்ம ஆட்சி வந்துவிட்டால் என்னாவது என சொல்ல மாட்டீர்கள். இதை தடுத்து நிறுத்தி விட்டால் அடுத்து நமது ஆட்சி வரும்போது அதை செய்ய முடியாது என்று நினைப்பீர்கள். இதுதானே உங்களுக்குள்ள உள்ள அண்டர்ஸ்டாண்டிங். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்