அதிமுகவின் தேர்தல் அறிக்கை : ஆடி போன திமுக

அதிமுகவின் தேர்தல் அறிக்கை : ஆடி போன  திமுக



அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்டு இருக்கும் முக்கியமான 7 திட்டங்கள் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகளை இந்த நான்கு அறிவிப்புகள் மாற்றலாம் என்கிறார்கள். 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக தேர்தல் அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. தேர்தல் முடிவுகளை புரட்டி போடும் அளவிற்கு பல அதிரடி அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். இந்த தேர்தலில் இனி அதிமுக உற்சாகமாக பிரச்சாரம் செய்யும் அளவிற்கு கவர்ச்சிகரமான பல முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.



அதிமுக அறிக்கையில் முதல் முக்கியமான இரண்டு விஷயங்கள் அனைவருக்கும் சூரிய சக்தி அடுப்பு வழங்கப்படும் மற்றும் அம்மா வாஷிங்மெசின் வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் ஆகும். இரண்டும் பெண்கள் மத்தியில் கண்டிப்பாக வரவேற்பை பெறும். முக்கியமாக கேஸ் விலை உயரும் போது சூரிய மின் அடுப்பு திட்டங்கள் கண்டிப்பாக வரவேற்பை பெறும்.

 வீட்டில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது கண்டிப்பாக பெரிய அளவில் இளைஞர்களின் வாக்குகளை கவர உதவும். இளைஞர்கள் வேலையின்மையால் கஷ்டப்படும் போது இந்த அறிவிப்பு இளைஞர்களை அதிமுக பக்கம் இழுக்கும்.

இபோக அனைவருக்கும் வீடு வழங்கும் வகையில் அம்மா இல்லம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று அதிமுக கூறியுள்ளது. இந்த திட்டம் மூலம் கண்டிப்பாக சொந்த வீடு இல்லாத மக்கள் பயன்பெறுவார்கள். இவர்களின் வாக்குகள் கண்டிப்பாக அதிமுக பக்கம் செல்ல வாய்ப்புள்ளது .கேபிள்இலவச டிவி எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது 

 இலவச கேபிள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனால் மாதா மாதம் 150-500 ரூபாய் வரை கேபிள், டிஷ் கட்டணம் செலுத்த வேண்டியது இல்லை.ஊதியம்இது போக முதியவர்களின் வாக்குகளை கவரும் வகையில் முதியோர் ஓய்வூதியம் ரூ2,000 வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது . 



உள் ஒதுக்கீடு கொடுத்தது போல அனைத்து ஜாதியினருக்கும் உள் இட ஒதுகீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. கண்டிப்பாக எம்பிசி பிரிவில் இருக்கும் பல்வேறு ஜாதியினர் இதனால் அதிமுகவின் பக்கம் தங்கள் கவனத்தை திரும்புவார்கள்.

 அதிமுகவின் இந்த தேர்தல் அறிக்கை பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள், சாதி வாக்குகள் என்று அனைத்தையும் குறி வைத்து சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளது. அதிலும் மேற்கண்ட இந்த 7 வாக்குறுதிகள் தேர்தலில் மிகப்பெரிய கேம் சேஞ்சர்களாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.'

 குல விளக்கு திட்டம் மூலம் குடும்ப தலைவிகளுக்கு, ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் வழங்கப்படும், பெண்களுக்கு வாசிங்மிஷின் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தேர்தல் களம் விறுவிறுப்பை எட்டியுள்ளது. 

 குல விளக்கு திட்டம் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் 1,500 ரூபாய் குடும்பத்தலைவிகளுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்ன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வாசிங்மிஷின் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் இலவச 2ஜிபி டேட்டா - அதிமுக தேர்தல் அறிக்கை!நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிருக்கு, 50 % கட்டணச் சலுகை வழங்கப்படும்.என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் அட்டைதாரகளுக்கும் சோலார் சமையல் அடுப்பு இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது இவ்வாறு பெண்களின் வாக்குகளை குறி வைத்து அதிமுக தேர்தல் அறிக்கை அமைந்துள்ளது.'! (?)

 ஜாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைவருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வர வேண்டும் என பாமக நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தையும் பாமக நடத்தியது.இந்த நிலையில் வன்னியர்களின் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்றும் அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டணி என பாமக அறிவித்திருந்தது. இதையடுத்து இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்குவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் இனி சத்துணவு வழங்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு என தொடங்கப்பட்ட தனியார் பங்களிப்புடன் கூடிய காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரிவுபடுத்தி செயல்படுத்தப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மொத்தமாக வாக்குகளை எல்லாம் மேக்னட் போல தன் பக்கம் இழுக்கும் அறிவிப்பு ஒன்றை முதல்வர் பழனிசாமி வெளியிட்டு இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருந்த வரை.. அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எப்போதும் பெண்களை மனதில் வைத்து திட்டங்கள் அறிவிக்கப்படும். அதிலும் குடும்ப தலைவிகளை மனதில் வைத்து அவர்களின் வேலைகளை எளிதாக்கும் வகையில் ஜெயலலிதா அறிவிப்புகளை வெளியிடுவார். இதனால்தான் எப்போதும் அதிமுகவிற்கு பெண்களின் ஆதரவு அதிகமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது ஜெயலலிதாவின் அதே ஸ்டைலை முதல்வர் பழனிசாமியும் பின்பற்ற தொடங்கி உள்ளார். தொடர்ந்து பெண்களை மனதில் வைத்து இவர் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஆனால் இன்று  வெளியிட்டு இருக்கும் ஒரு அறிவிப்பு மொத்தமாக தேர்தல் முடிவுகளை மாற்றும்என்கிறார்கள். 

இதற்கு முன் அதிமுக, திமுக அரசுகள் இலவசமாக டிவி, ஃபேன் , மிக்சி, அடுப்பு, கிரைண்டர் கொடுத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு முறையும் திமுக, அதிமுக குடும்ப வாக்குகளை மாறி மாறி கவர்ந்தது. அதிலும் கடந்த தேர்தலில் ஜெயலலிதா ஒரு படி மேலே போய் இலவசமாக ஃபேன் , மிக்சி, அடுப்பு, கிரைண்டர் கொடுத்தார்.முடிவை மாற்றியது

இந்த அறிவிப்புதான் தேர்தல் முடிவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. இதுதான் மொத்தமாக பெண்கள் வாக்குகளை கவர உதவியது. 2016ல் ஜெயலலிதா செய்த அதே அறிவிப்பை போல தற்போது வாஷிங் மெஷின் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்.

ஜெயலலிதா இப்பொது இருந்திருந்தால் எந்த அறிவிப்பை வெளியிட்டு இருப்பாரோ அதே போன்ற ஒரு அறிவிப்பை முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். கண்டிப்பாக பெண்களின் வாக்குகளை இது அதிமுகவை நோக்கி திருப்பும். தேர்தல் முடிவுகளில் இது பெரிய மாற்றத்தை கண்டிப்பாக ஏற்படுத்தும்.'

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்