புஸ்வானம் ஆன ஸ்டாலினின் திட்டங்கள்..... மாநாட்டில் அறிவித்த 7விஷயங்கள் டமால்....!?

புஸ்வானம் ஆன ஸ்டாலினின் திட்டங்கள்..... மாநாட்டில்  அறிவித்த 7 விஷயங்கள் டமால்....!?

     அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான தொலைநோக்கு நலத்திட்டங்களை அறிவிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் சொன்னதும், என்னவோ ஏதோ என்று பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தன. அனால் அவர் அறிவித்த பல விஷயங்கள் ஏற்கனவே தமிழ்நாடு அரசு செய்து, நடைமுறையில் இருக்கும் விஷயங்களே!

பிரமாண்டமாக நடைபெற்ற திருச்சி மாநாட்டில் திமுகவின் 7 முழக்கங்கள் என்று ஆரவாரமாக வெளியிட்ட அறிவிப்புகள், திமுகவினர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. அதிமுக ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நலத்திட்டங்களை நகலெடுத்து, அதில் திருத்தம் என்ற பெயரில் பெயர்களை மட்டும் மாற்றி, அறிவிப்புகளாக அறிவித்துள்ளது திமுக. அந்த 7 அறிவிப்புகளும் சரியானபுள்ளிவிவரங்கள் இல்லாமலும் , நடைமுறைக்கு சாத்தியமில்லாததும், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் நலத்திட்டங்களுமாக இருக்கிறது. அவை

DMKs Trichy rally announcement wont be implement

1) வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு என்ற தலைப்பில் பொருளாதார வளர்ச்சியை இரட்டை இலக்கிற்கு கொண்டு செல்ல ரூ 35 லட்சம் கோடியில் செய்யவிருப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் -7.7 (மைனஸ்) சதவிகிதமாக குறைந்த போதும், தமிழகத்தின் பங்கு அதில் 2.02% சதவிகிதமாக இருந்தது. தமிழ்நாடு அரசு இடைக்கால பட்ஜெட்டில் கூட தமிழக உள்நாட்டு உற்பத்தியின் அளவை 14.4% சதவிகிதமாக உயர்த்த அதிமுக அரசு முயற்சி செய்து வருகிறது. கொரோனா நோய் தொற்று இருந்த 2 ஆண்டுகள் தவிர, கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் உற்பத்தியில் இரண்டிலக்கத்தை விட்டு கீழிறங்கியதில்லை. இதுக்கு மேல் இரண்டிலக்க டார்கெட் என்று ஸ்டாலின் கூறியது முழுக்க பொய்யான விஷயம்.

2) மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் தற்போது இருபோக நிலங்களாக 10 லட்சம் ஹெக்டர் உள்ளதாகவும், அதனை 20 லட்சம் ஹெக்டருக்கு உயர்த்த வேண்டும் என கூறினார். தமிழகத்தில் நெல் பயிரப்படும் நிலப்பரப்பின் அளவு சுமார் 17.58 லட்சம் ஹெக்டேர். தமிழ்நாட்டில் பயிரிடப்படும் நிலப்பரப்பின் மொத்த அளவு 56.72 லட்சம் ஹெக்டர். மாநிலத்தின் சராசரி அளவு 45.82 லட்சம் ஹெக்டர் சதவிகிதம் பரப்பளவு. மேலே குறிப்பிட்ட எந்த அளவுகளிலும் திமுக குறிப்பிட்ட பரப்பளவு அளவு ஒத்துப்போகவில்லை. பரப்பளவு கணக்கெடுப்பில் தகுந்த முறையான வழிமுறைகளை மேற்கொள்ளவில்லை என்று புரியவருகிறது. திமுக கூறிய விஷயங்களில் இதுவும் ஒரு பொய்.

3) குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர் என்ற தலைப்பில், நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காட்டிற்கு குறைக்க வேண்டும் என்று தெரிவித்தார். கடந்த 2019 ஆண்டில் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற பட்டத்தை தமிழகம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்களை குழப்புவதற்காக சரியான ஆதாரமில்லாமல் இப்படி பொத்தாம் பொதுவாக ஒரு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளது என்று தெரிகிறது. தமிழகம் நீரின் முக்கியத்துவம் அறிந்த மாநிலம் என்பதற்கு ஏற்றார் போல் பல நலத்திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும், மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5 லிருந்து 20 விழுக்காட்டிற்கு உயர்த்த வேண்டும் என்றார். தமிழ்நாட்டின் நீர் மறுசுழற்சி விகிதம் தற்போது 5 என்று எந்தவொரு அரசமைப்பும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. அப்படியிருக்க திமுக குறிப்பிட்டிருக்கும் கணக்கெடுப்பு ஆதாரமற்ற அறிவிப்பு மட்டுமே. முதல்வர் எடப்பாடி பழனிசாமி 2019ல் நீர் மறுசுழற்சி நிலையம் உருவாக்கியதும், கிட்டத்தட்ட 20% சதவிகிதம் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திமுக குறிப்பிட்டபடி நீர் மறுசுழற்சி 5% சதவிகிதம் முதல் 20% சதவிகிதம் வரை உயர்த்துதல் என்பது வெறும் கண்துடைப்பே.

4) அனைவருக்கும் உயர்தர கல்வி மற்றும் உயர்ந்த மருத்துவம் என்ற தலைப்பில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதத்தை 16 லிருந்து 5 ஆக குறைக்க போவதாக கூறினார். இது கல்விக்கான (UDISE) ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு வெளியிட்ட ரிபோர்டின் படி 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் சதவிகிதம் 16% என்றும். அது தவறான அறிக்கையென தமிழ்நாடு கல்வித்துறை தெரிவித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இடைநிலை பள்ளி முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் சதவிகிதம் 99% ஆக உயர்த்தப்படும் எனவும், இடைநிற்றல் சதவிகிதம் 0.75% சதவிகிதம் வரை குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரபூர்வமான அரசு வெளியிட்ட கணக்கெடுப்பை கணக்கில் கொள்ளாமல் தங்களுக்கு கிடைத்த தகவலின்படி அறிவிப்பை தயார் செய்துள்ளது திமுக.

5) அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் என்ற தலைப்பில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ 1000, பட்டியலினத்தவர், பழங்குடியினர் போன்றோர்க்கு கல்வி உதவி தொகை என்று கூறினார். சுமார் 7.40 லட்சம் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கல்வி உதவித்தொகையை பெற்று வருகின்றனர். இடைக்கால பட்ஜெட்டில் அதற்காக சுமார் ரூ 374 கோடி அதிமுக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி, மதியஉணவு, தங்குமிடம் போன்ற செலவுகளை அரசே பொறுப்பேற்று கொண்டு வருகிறது. திமுக பிற்படுத்தப்பட்ட சமூகத்தை வைத்து அரசியல் செய்வது புதிதல்ல என்று இதன் மூலம் தெரிகிறது.

DMKs Trichy rally announcement wont be implement

6) எழில்மிகு மாநகரங்கள் மாநிலம் என்ற தலைப்பில், நகர்ப்புறத்தில் கூடுதலாக 36 லட்சம் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் பெற்ற நகர்ப்புற வீடுகளின் விகிதம் 35லிருந்து 75 ஆக உயரும் என்றார். திமுகவின் நலத்திட்டமான குடிநீர் குழாய் இணைப்பு திட்டம் முதன் முதலில் திமுக ஆட்சியில் தான் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது அதிமுக அரசு அதை செயல்படுத்தி கொண்டிருக்கிறது. அதன் மூலம் சுமார் 80% சதவிகிதம் நகர்ப்புற வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நடைமுறை எண்ணிக்கை தெரியாமல் திமுக கணக்கெடுப்பு எடுத்துள்ளது முதன்மை கட்சியின் உதாசினம்

மேலும்

7) உயர்தர ஊரககட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம் என்ற தலைப்பில் எல்லாகிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணையவசதி ஏற்படுத்துதல் என்று கூறினார். திமுக மீண்டும் அதிமுக செய்த நலத்திட்டங்களுக்கு உண்டான நற்பெயரை பெற முயற்சிக்கிறது. ஏற்கனவே 98% சதவிகிதம் பாரத்நெட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் மூலம் கிராமங்களில் அதிவேக இனையவசதி சேவையை பெற்று வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக அரசு செய்த அனைத்து நலத்திட்டங்களையும் ஆட்சிக்கு வந்தவுடன் செய்வேன் என்று வாக்குறுதி அளிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. ஏற்கனவே அதிமுக அரசு செயலில் மேற்கொண்டு வந்த நலத்திட்டங்களை புதிய நலத்திட்டங்கள் போல அவர் மேடையில் அறிவிப்பதை எந்த அலகால் அளப்பது என்று தெரியவில்லை என்றும், அதிமுக அரசு செய்து கொண்டிருக்கும் நலத்திட்டங்களை ஏன் ஸ்டாலின் அவர்கள் அவர் செய்ய போகும் நலத்திட்டங்கள் என்று தெரிவிக்க வேண்டும் என்று அரசியல் விமர்சகர்களுக்கு கேள்விகள் எழுப்புகின்றனர். மேலும், இவ்வளவு  பில்டப் கொடுத்து நடத்திய மாநாட்டில் திமுக வெளியிட்ட 7 அறிவிப்புகள் பற்றிய பேச்சு இரண்டு நாட்கள் கூட தொடரவில்லை என்பது தான் உண்மை.

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
நெற்றிக்கண் பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் செய்தியாளர் சம்பத்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார்
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்