இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டிருக்கிறது : பிரதமர் மோடி

இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டிருக்கிறது : பிரதமர் மோடிஇலங்கையில் ஈழத் தமிழர்கள் சமத்துவம், சமநீதி, அமைதி மற்றும் கண்ணியத்துடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு உறுதி செய்து வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். சென்னையில் இன்று பல்வே புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இலங்கையில் வாழும் தமிழர்கள் நலனில் மத்திய அரசு அக்கறை கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களின் நலனுக்காக பல்வேறு அபிவிருத்தி பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வடகிழக்கில் இந்தியா சார்பில் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு 50,000 வீடுகள் கட்டிதரப்பட்டுள்ளன. 

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களுக்காக 4,000 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன. அதேபோல் சுகாதார வசதிகளுடனான அவசர ஊர்தியையும் இந்தியா ஈழத் தமிழருக்கு வழங்கி உள்ளன. யாழ்ப்பாணத்தில் இந்தியா கட்டி வரும் கலாசார மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. 

இலங்கை சிறையில் ஒரு தமிழக மீனவர் கூட இல்லை.. சென்னையில் பிரதமர் மோடி சென்னைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையே விமான சேவையை தொடங்கி இருக்கிறோம். யாழ்ப்பாணம் - மன்னார் ரயில் பாதை திட்டத்தை சீரமைத்து கொண்டிருக்கிறது இந்திய அரசு.இலங்கையில் ஈழத் தமிழர்கள் சமத்துவமாக, சமநீதியுடனும் அமைதியாகவும் கண்ணியத்துடனும் வாழ்வதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.'