திமுகவை விட்டு வெளியேறும் கட்சிகள்..... அதிர்ச்சியில் முகஸ்டாலின்.....?

திமுகவை விட்டு வெளியேறும் கட்சிகள்..... அதிர்ச்சியில் முகஸ்டாலின்.....?

திடீரென்று திமுக தலைமைக்கு ஒரு சிக்கல் எழும் சூழல் ஏற்பட்டுள்ளது... அப்படி ஒரு நெருக்கடியை கமல்ஹாசன் ஏற்படுத்தி விடுவார் என்றும் தெரிகிறது.

வழக்கமாக தேர்தல் என்றால், இந்நேரம் கூட்டணி முடிவாகி இருக்க வேண்டும்.. ஆனால், எந்த கூட்டணியும் முடிவாகாமல், திமுக தலைவர் ஒருபக்கமும் முதல்வர் மறு பக்கமும் பிரச்சாரத்தில் இறங்கி வருகிறார்கள்.

இந்த முறை தாங்களே பிரதான இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதால், கூட்டணிகளுக்கு அவ்வளவாக சீட் ஒதுக்க, தலைமைகள் பிடிவாதம் காட்டி வருகின்றன.

பாஜக

அதிமுக தரப்பிலாவது பாஜக உறுதியாகிவிடும் என்று தெரிகிறது.. ஆனால் திமுக தரப்பில் அப்படி எதுவுமே உறுதியாக சொல்ல முடியவில்லை. காங்கிரஸ் கட்சி போதுமான சீட் ஒதுக்கீடு கிடைக்காது என்ற காரணத்தினால், இப்படியும் இல்லாமல் அப்படியும் இல்லாமல் திணறி கொண்டிருக்கிறது. வைகோ, திருமாவும் உச்சக்கட்ட குழப்பத்தில் இருக்கிறார்கள்.

அதிர்ச்சி

கூட்டணிகளுக்கு சீட் விஷயத்தில் கண்டிப்பு காட்டும் கூட்டணி தலைமை, கமலை மட்டும் உள்ளே கொண்டு வரும் முயற்சியில் இறங்கி வருகிறது.. ஆனால்,கமல் பேச்சு வேறு தினுசாக உள்ளது.. "நாமெல்லாம் ஒரு கட்சியா என்ற மாதிரி அன்னைக்கு ஸ்டாலின் பதில் சொன்னாரே.. அதை மன்னிச்சிடலாம்.. ஆனால் மறக்க முடியாது.. என் பெயரையே அன்னைக்கு எல்லாரும் சொல்றதுக்கு தயங்கினாங்களே? ஆனால், இன்னைக்கு நம்மையும் ஒரு கட்சியாக பேசும் அளவுக்கு நம் வளர்ச்சி இருக்கிறது" என்று சொல்லி காட்டி உள்ளார்.

பொதுக்குழு

கமல் பொதுக்குழுவில் பேசியதை பார்த்தால், திமுகவுடன் கூட்டணி இருக்காது என்றே முடிவு செய்யப்பட்டுவிட்டது.. "நாம் திமுக, அதிமுகவோடு சேர வேண்டாம்... நாம் நேர்மையான அணி.. மக்கள் கிட்ட சேருவோம்.. திமுக, அதிமுகவை மக்களிடம் அம்பலப்படுத்துவோம்.. அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் ஊழல் அரசியல் செய்யும் கட்சிகள்... ஊழல் அரசியல் செய்யும் கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது." என்று திட்டவட்டமாக சொல்லிவிடவும், ஸ்டாலின் தரப்புக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.. கமல் பேச்சு, அடுத்த குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இப்போதைக்கு கமல் கூட்டணியில் இணைய ஆம் -ஆத்மி தயாராகி விட்டது.

கம்யூனிஸ்ட்டுகள்

ஆனால், கமல் தலைமையில் 3வது அணி அமைந்தால், அவருடன் கூட்டணி சேர காங்கிரசுக்கு ஒரு விருப்பம் இருப்பதாகவே தெரிகிறது.. திமுகவில் பிரதான சீட் கிடைக்காத பட்சத்தில் நிச்சயம் கமலுடன் இணைய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.. அப்படி காங்கிரஸ் வந்தால், இந்த முறை விட்டுவிடக்கூடாது, கட்டாயம் மய்யத்துக்குள் இழுத்து போட்டு விட வேண்டும் என்று கமல் தீவிரமாக இருக்கிறாராம். ஒருவேளை திமுகவில் பேரம் சரியாக அமையா விட்டால் கம்யூனிஸ்ட்டுக்களை தங்கள் பக்கம் இழுக்கவும் கமல் விட்டாராம்.

வைகோ

இதுபோக, திருமாவளவனும் கூட இந்த கூட்டணியில் இணையக்கூடும் என்கிறார்கள்.. இப்படி காங்கிரஸ், திருமாவும் திமுகவை விட்டு பிரியும் சூழல் வந்தால், நிச்சயம் திமுகவுக்கு நெருக்கடி ஏற்படும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. கூட்டணி இல்லாமல் இதுவரை திமுக தேர்தலை சந்தித்து இல்லை.. ஒரு சீட், 2 சீட் விஷயத்தில் பிடிவாதம் காட்டி, கட்சிகளை இழப்பதைவிட, தாராளமாக அள்ளி கொடுத்து, அவர்களை கூட்டணியிலேயே தக்க வைக்கலாமே? கமலும் இல்லாமல், கூட்டணியையும் விட்டுவிட்டு, பெரிய நெருக்கடியில் திமுக சிக்கி விடக்கூடாது என்றும் அரசியல் வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

எதிர்ப்பு ஓட்டுக்கள்

அதேசமயம், கமல், ஒருவேளை திமுகவில் இணைந்தால் அது கமலுக்கே ஓரளவு எதிர்ப்பு ஓட்டுக்களையே பெற்று தரும் என்கிறார்கள்.. காரணம், ஊழலுக்கு எதிரானவர்கள் என்று இவ்வளவு காலம் தங்களை சொல்லிவிட்டு, இன்று அரசியலுக்காக திமுகவுடன் கை கோர்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்ற கேள்விகள் கமலை பார்த்து நிச்சயம் கைநீட்டி கேட்ககூடும்.. எனவே கமல் 3வது அணியா? அல்லது திமுகவில் கூட்டணியா என்பது இந்த வாரத்தில் தெரிந்துவிடும்..!