கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி போட்டி ...... அதிரடி காட்டும் அதிமுக....!

கிருஷ்ணகிரியில் கேபி முனுசாமி போட்டி ...... அதிரடி காட்டும் அதிமுக....!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. அத்துடன் மிக முக்கிய புள்ளிகள் எந்தெந்த தொகுதியில் போட்டியிட போகிறார்கள், யார் யாருக்கு வாய்ப்பு என்ற தகவலும் வெளியாகி, தமிழக அரசியல் களத்தை சூடேற்றி வருகின்றன.

இன்று அதிமுகவின் ஒரு உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.. அதன்படி, எந்த எந்த கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படும் என்ற லிஸ்ட் தரப்பட்டுள்ளது...

அதில் பாஜகவுக்கு 20 சீட்டுக்களும்,பாமகவுக்கு 21 சீட்களும், தேமுதிகவுக்கு 14 சீட்டுகளும், தமாகாவுக்கு 5 சீட்டுகளும், மற்ற கட்சிகளுக்கு 3 சீட்டுகளும் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது. 

றல், மிச்சம் உள்ள 171 தொகுதிகளிலும் அதிமுகவே நேரடியாக களமிறங்க போகிறது.. இப்படித்தான் திமுகவும் ஒரு பிளானை போட்டு வருகிறது.. குறைந்தது 170-லாவது நின்றுவிட வேண்டும், அதில் 130 சீட்டுக்களையாவது வென்றுவிட வேண்டும் என்ற திட்டத்தில் உள்ளது.. இதே பாணியைதான் அதிமுகவும் இவ்வளவு நாள் கையாண்டது.
தொகுதிகள்

சீட் இழுபறிக்கே இவ்வளவு நாள் ஆகிவிட்ட நிலையில், இப்போதுதான் ஓரளவு எல்லாம் முடிவுக்கு வந்துள்ளது.. அந்த வகையில் 171 தொகுதிகளில் யார், யார் எங்கே போட்டியிட போகிறார்கள் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எடப்பாடி தொகுதியிலேயே போட்டியிட போகிறார்.. சென்ற மாதம் உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று வந்தது.. அதன்படி, எடப்பாடியார் தொகுதி மாற்றி போட்டியிட போவதாக சொல்லப்பட்டது.

சமுதாய வாக்கு

குறிப்பாக, கொங்கு பெல்ட்டில் எங்காவது ஒரு இடத்தில் போட்டியிடலாம் என்றும், அங்குதான் தனக்கு சமுதாய வாக்குகள் குவியும் என்று அதிமுக தலைமை நம்புவதாகவும் செய்திகள் கசிந்தன.. அதுமட்டுமல்ல, வன்னியர்கள் நிறைந்த எடப்பாடி தொகுதியைவிட, தனக்கு சாதகம் நிறைந்த கொங்கு மண்டலம் ஏதாவது ஒன்றில் போட்டியிடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால், அப்படியெல்லாம் எதுவும் இல்லை.. தன்னுடைய எடப்பாடி தொகுதியிலேயே முதல்வர் போட்டியிட போகிறாராம்..!

ஓபிஎஸ்

துணை முதல்வர் ஓபிஎஸ் போடியில் போட்டியிட போகிறார்.. தன் தொகுதிக்கு ஓபிஎஸ் செய்து வைத்துள்ள நலத்திட்டங்கள் ஏராளம்.. தொகுதியை அந்த அளவுக்கு சிறப்பாக எல்லா வசதிகளையும் மத்திய அரசு ஆதரவுடன் ஓபிஎஸ் கொண்டு வந்து சேர்த்துள்ளார்.. இது அவருக்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இந்த தேர்தலில் இருக்க போகிறது.

சசிகலா

அதேபோல, கட்சியின் மூத்த தலைவர் கேபி முனுசாமியை கிருஷ்ணகிரி தொகுதியில் நிறுத்தப்படுவதாக தெரிகிறது.. வைத்தியலிங்கத்துக்கு ஒரடத்தநாடு தொகுதி தரப்பட்டுள்ளது.. இவர்கள் எல்லாம் எங்கே சசிகலா பக்கம் சென்றுவிடுவார்களோ என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அனைவருக்கும் சீட் தந்து அதிமுகவிலேயே ஐக்கியமாக்கப்பட்டு உள்ளனர்..

மயிலாப்பூர்

பெரம்பலூர் தொகுதியில் வளர்மதியும், ராயபுரம் தொகுதியில் ஜெயக்குமாரும், மயிலாப்பூர் தொகுதியில் மைத்ரேயினும், அண்ணாநகர் தொகுதியில் கோகுலஇந்திராவும், விழுப்புரம் தொகுதியில் சிவி சண்முகமும், கெங்கைவள்ளி (தனி) தொகுதியில் சரோஜாவும், மேட்டூரில் செம்மலையும் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதில், மைத்ரேயன் ஆகட்டும், கோகுல இந்திரா ஆகட்டும் வளர்மதி ஆகட்டும், சென்ற முறை தேர்தலில் இருந்து வாய்ப்பு கேட்டு கொண்டே இருந்தவர்கள்.. எம்பி தேர்தலிலும் சீட் கேட்டு நொந்து போய்விட்டனர்..

உத்தேசம்

இப்போது இவர்களுக்கு சீட் தருவதாக கூறப்படுவது மிகப்பெரிய திருப்பத்தை அதிமுகவில் ஏற்படுத்தக்கூடும் என்று நம்பப்படுகிறது... அதேபோல, இப்போதுள்ள சிட்டிங் அமைச்சர்கள் பெரும்பாலும் அவரவர் தொகுதியியே போட்டியிடக்கூடும் என்றும் தெரிகிறது.. இதெல்லாம் ஒரு உத்தேச பட்டியல் என்றாலும், அதிமுக இப்படி ஒரு லிஸ்ட்டை திமுகவுக்கு முந்திக்கொண்டு வெளியிட்டு பரபரப்பை கூட்டி வருகிறது.