பட்ஜெட் 2021 - என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன?

பட்ஜெட் 2021 - என்னென்ன அம்சங்கள் இடம்பெற்றுள்ளன? மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய் தார். மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் எந்த மாதிரியான அறிவிப்புகள் வெளியாகும், சிறப்புப் பொருளாதாரச் சலுகை எதுவும் அறிவிக்கப்படுமா, வருமான வரியில் தளர்வுகள் கிடைக்குமா போன்ற எதிர்பார்ப்புகள் நாட்டு மக்கள் மத்தியில் உள்ளன.

*இந்த பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்காக அல்ல, விற்பனைக்கானது. முன்னதாக, ரயில்வே, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களை விற்றனர். இந்த பட்ஜெட்டில் எரிவாயு குழாய், அரங்கம், சாலைவழிகள் மற்றும் கிடங்குகள் உள்ளிட்ட பல நிறுவனங்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது: ஆர்ஜேடி தலைவர் தேஜாஷ்வி யாதவ்

பட்ஜெட் தாக்கலுக்கு பின்னர் நிர்மலா சீதாராமன் பேட்டி:

நுகர்வோர் பாதிக்கப்படாத வகையில் கூடுதல் வரி விதிப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதித்துறையில் முக்கியத்துவம் வாய்ந்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிர்மலா சீதாராமன்

* பிப்ரவரி 2020 இல் 3.5% ஆகத் தொடங்கிய நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9.5% ஆக உயர்ந்துள்ளது. பற்றாக்குறை நிர்வாகத்திற்கான தெளிவான வியூகங்களை வகுத்துள்ளோம் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* இந்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் சாலைகள், மின் உற்பத்தி, பாலங்கள், துறைமுகங்கள் மற்றும் உள்கட்டமைப்பிற்காக பெரிய தொகையை செலவழிக்கவுள்ளோம் - நிர்மலா சீதாராமன்

* அரசாங்க செலவினங்கள் மற்றும் வருவாய் அறிக்கைகளின் கணக்கு இப்போது மிகவும் வெளிப்படையாக மற்றும் திறந்த நிலையில் உள்ளது: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

* காற்று மாசுபாட்டை தடுக்க 2,217 கோடி ஒதுக்கீடு செய்யாட்டுள்ளது: நிர்மலா சீதாராமன்

பிரதமர் மோடி: சிறப்பான மாற்றங்களை கொண்டுவந்து அனைவருக்கும் ஏற்றமளிக்கும் பட்ஜெட்டாக உள்ளது. இந்த பட்ஜெட் கொரோனாவில் இருந்து இந்தியாவை மீட்டு வேலைவாய்ப்புகளை அளிக்கும். விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறுள்ளன.

பெட்ரோல், டீசல் மீது கூடுதல் வரி விதிப்பு: கூடுதல் வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளதால் பெட்ரோல், டீசல் உயர்கிறது. அதன்படி, நாளை முதல் ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் ரூ.2 .50 , டீசல் விலையில் ரூ. 4 உயருகிறது.

* கடந்த ஆண்டில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 6.48 கோடியாக உயர்வு.

2014ஆம் ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 3.31 கோடியாக இருந்தது.

* 5ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்கு 41% பங்கு.

* இரும்பு, ஜவுளி உள்ளிட்ட பல்வேறு மூலப்பொருட்களுக்கான சுங்கவரி குறைக்கப்படும்.

* பி.எஃப் பங்கு தொகையை தாமதமாக செலுத்துவதற்கான அபராதம் இனி இல்லை.

*நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்துவிட்டு தனது இருக்கையில் அமர்ந்தார். 1 மணி நேரம் 50 நிமிடம் அவர் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.

*கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது.

* 3 ஆண்டுகளுக்கு பிறகு வருமான வரி கணக்குள் ஆய்வு செய்யப்படாது. பெரியளவில் வரி ஏய்ப்பு செய்திருந்தால் தான் 10 ஆண்டு வரையான வருமான வரி கணக்குகள் ஆய்வு செய்யப்படும்.

* வரி ஏய்ப்பவர்களை விரைவாகவும், எளிதாகவும் கண்டறிய புதிய தொழில்நுட்பம்.

*தங்கத்துக்கான இறக்குமதி வரி 12.5 %லிருந்து 10 % ஆக குறைப்பு.

*வீட்டுக்கடனில் வட்டிக்கான வருமான வரிச் சலுகை மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு.

*குறைந்த விலை வீடுகளை வாங்குபவர்களுக்கான வரிச் சலுகை 2022ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு

*“பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து.” குறளையும் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.

*வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு சலுகை. வெளிநாடு வாழ் இந்தியர்கள் நாடு திரும்பும் போது இரட்டை வரி விதிப்புக்கு ஆளாவதை தவிர்க்க நடவடிக்கை

*சிறிய அளவிலான வருமான வரி சச்சரவுகளை தீர்த்துவைக்க புதிய குழு அமைக்கப்படும்.

*இதுவரை இல்லாத அளவு 6.48 கோடி பேர் வருமான வரி தாக்கல் செய்துள்ளனர்.

* முதியவர்களுக்கு வருமான வரியில் சலுகை. 75 வயதான ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் மற்றும் வட்டியை மட்டும் நம்பியிருந்திருந்தால் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டாம்.

*“இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு
” என்ற குறளை நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் கூறினார்.

*புதுப்பித்தக்க ஆற்றல் மேம்பாட்டுக்கு 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு, சூரிய ஆற்றல் கழகத்துக்கு 1000 கோடி ஒதுக்கீடு.

*டிஜிட்டல் முறையில் மக்கள் தொகஒ கணக்கெடுப்பு நடைபெறும்.


*சந்தைகளில் இருந்து 12 லட்சம் கோடி கடன் பெற இந்தியா திட்டம்.

*நடப்பு நிதியாண்டில் நாட்டின் நிதிப் பற்றாக்குறை 9.50 % ஆக உயரும் என கணிப்பு. அடுத்த நிதியாண்டில் 6.8 ஆக இருக்கும். அடுத்த நிதியாண்டில் அரசின் செலவுகள் 34.85 லட்சம் கோடியாக இருக்கும்.

*சென்னை மீன் பிடி துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும்.

*மின்னணு பணப் பரிமாற்றத்தை ஊக்குவிக்க 1500 கோடி ரூபாய் ஒதுக்கீடு
*ககன்யான் திட்டத்தில் 4 வீரர்கள் ரஷ்யாவில் பயிற்சி பெறுவார்கள்

*தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த பல்நோக்கு கடல் பூங்கா நிறுவப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கடல்பாசியை பதப்படுத்த புதிய திட்டம் தொடங்கப்படும்.

*100 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்கப்படும், 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.

*சாலையோர வியாபாரிகளுக்கும் சமூக பாதுகாப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்.

*16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடன் வழங்க இலக்கு

*சிறு, குறு, தொழில்களின் வளர்ச்சிக்காக 15,000 கோடி ஒதுக்கீடு

*கடந்த ஓராண்டில் நெல் கொள்முதல் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளது. அரசின் தானிய கொள்முதல் மூலம் ஓராண்டில் ஒன்றரை கோடி கூடுதல் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

*எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் ஆரம்பம் முதலே அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்

*குழாய் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் 100 நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யப்படும்

* ஒரு காப்பீடு நிறுவனம், 2 பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை விற்க முடிவு

*வங்கியின் டெபாசிட் கணக்குகளுக்கு காப்பீடு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு.

*பாரத் பெட்ரோலியம், ஏர் இந்தியா பங்குகளை விற்க நடவடிக்கை

*எல்ஐசி நிறுவன ஆரம்ப பங்கு வெளியீடு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

*வரும் நிதியாண்டில் ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*பங்கு சந்தைகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த புதிய சட்டம் உருவாக்கப்படும்.

*காப்பீட்டு துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்வு

*அரசு வங்கிகளுக்கு இந்த பட்ஜெட்டில் கூடுதலாக 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு
*சென்னையில் 119 கிமீ தூரத்துக்கு 63 ஆயிரத்து 246 கோடியில் மெட்ரோ ரயில் திட்டங்கள் விரிவுபடுத்தப்படும்.

*27 முக்கிய நகரங்களில் மெட்ரோ பணிகள் விரிவுபடுத்தப்படும். அதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

*அகல ரயில் பாதைகள் 2023க்கும் மின்மயமாகும்.

*தனியார் மயமாகிறதா மின் வாரியம்? மக்கள் தாங்கள் விரும்பும் நிறுவனங்களிடமிருந்து மின் விநியோகம் பெறும் திட்டம்

*மும்பை -கன்னியாகுமரி இடையே புதிய தொழில்வழித் தடம் அமைக்க திட்டம்.

*காற்று மாசுபாட்டை தடுப்பதற்காக 2,217 கோடி ரூ ஒதுக்கீடு.

*பிரத்யேக சரக்கு ரயில் பாதை அடுத்த ஆண்டு ஜூலை 22ஆம் தேதி நிறைவடையும்.

*தமிழகத்தில் 1.03 லட்சம் கோடியில் புதிய சாலைத் திட்டங்கள் அமைக்கப்படும்
*நாடு முழுவதும் 13 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் 11,500 கிலோ மீட்டர் தூரம் சாலை பணிகள் தொடங்க உள்ளது.

*மதுரை முதல் கேரளாவின் கொல்லம் வரை நவீன வசதிகளுடன் சாலைகள் அமைக்கப்படும்

*உள் கட்டமைப்பு வசதிக்கு 20,000 கோடி, நகர்ப்புற தூய்மை திட்டம் 1.41 லட்சம் கோடி, கொரோனா தடுப்பூசி 35,000 கோடி ரூ

*நகர்ப்புறங்களில் அனைத்து குடும்பங்களுக்கும் குடிநீர் வழங்க புதிய திட்டம்

*3 ஆண்டுகளில் 7 ஜவுளிப் பூங்காக்கள் ஏற்படுத்தப்படும்.

*இந்த பட்ஜெட் சுகாதாரம் உள்ளிட்ட 6 தூண்களை உள்ளடக்கியது. 64, 180 கோடி ரூபாய் செலவில் பிரதமரின் சுயசார்பு ஆரோக்கிய திட்டம் செயல்படுத்தப்படும்.


*1.41 லட்சம் கோடியில் நகர்ப்புற தூய்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

*பழைய வாகனங்களை அழிக்க புதிய திட்டம்

*கொரோனா தடுப்பூசிக்கு மத்திய பட்ஜெட்டில் 35,000 கோடி ரூ ஒதுக்கீடு

* “2021ஆம் ஆண்டிலும் கொரோனாவுக்கு எதிரான போர் தொடரும். புதிய தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும். சுய சார்பு இந்தியா திட்டத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கான அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் உள்ளன. ”
நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் பட்ஜெட்!
*“சுய சார்பு இந்தியா திட்டம் 5 மினி பட்ஜெட்டுகளுக்கு சமமானது. 27 லட்சம் கோடி ரூபாய்க்கான ஊக்கத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. கொரோனா காலத்தில் 80 கோடி பேருக்கு தடையின்றி உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன.”

*“கொரோனாவுக்கு எதிராக இந்தியா மட்டுமே இரு தடுப்பூசிகளை விரைவாக கொண்டு வந்துள்ளது. பொதுமுடக்கத்தை அமல்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். கொரோனா காலத்தில் பணியாற்றிய முன்களப் பணியாளர்களுக்கு நன்றி. ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் வெளி மாநில தொழிலாளர்களுக்கு மிகப் பெரியளவில் கை கொடுத்துள்ளது.”
* “மிகவும் இக்கட்டான சூழலில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.” - நிர்மலா

*நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்யத் தொடங்கினார். (காலை 11 மணி)

*நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டுக்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

*கையடக்க கணினியான ‘டேப்’ பயன்படுத்தி பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார் நிர்மலா சீதாராமன்

*நிதி நிலை அறிக்கையின் விவரங்கள் உடனுக்குடன் இணையதளத்திலும் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*கொரோனா பொது முடக்கத்தால் நலிந்துபோன சிறு, குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் சலுகைகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


*சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியில் அதிகக் கவனம் செலுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
*2016ஆம் ஆண்டு முதல் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்டுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டும் இடம்பெறும்.

*காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
*இந்த பட்ஜெட்டை இந்தியாவின் முதல் டிஜிட்டல் பட்ஜெட் என்று கூறலாம். Union Budget App என்ற மொபைல் ஆப்பில் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
*கொரோனா பொதுமுடக்கத்துக்கு பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால் சலுகைகள் அதிகளவில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.