ஓசூர்உழவர் சந்தையை திறக்கக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்

  • ஓசூர் உழவர் சந்தையை  திறக்கக்கோரி இந்திய 

  • கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முற்றுகை போராட்டம்கொரோனா தொற்று நோயினால் நாடு முழுவதும் அனைத்து வணிக நிறுவனங்களும், வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைகளை மூடி மீண்டும் ஊரடங்கு உத்தரவு,தளர்வுடன் திருப்பப் பெற்று தமிழகம் முழுவதும் அனைத்து வணிக வளாகங்களும்,வாரச்சந்தை மற்றும் உழவர் சந்தைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அதிக காய்கறி ஏற்றுமதி செய்து வரும் உழவர்சந்தையை மட்டும் கடந்த 10 மாதமாக திறக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.இந்நிலையில் உழவர் சந்தையை திறக்க வலியுறுத்தி,உழவர் சந்தை அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் விவசாயிகள் பல முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் இல்லை.இதையடுத்து நேற்று ஓசூர் உழவர் சந்தையை மீண்டும் திறக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ.)சார்பில் முற்றுகை போராட்டம் சப்கலெக்டர் ஆபீஸ் முன்பு நடந்தது.இதற்கு ஏ.ஐ.டி.யூ.சி.மாவட்ட செயலாளர் மாதையன் தலைமை வகித்தார்.நடைபாதை சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, சி.பி.ஐ.நகர துணை செயலாளர் சிவராஜ்,ஏ.ஐ.ஒய்.எப்.மாவட்ட செயலாளர் ஆதில்,நகர தலைவர் நூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளரும்,முன்னாள் எம்.எல்.ஏ.வு.மான ராமச்சந்திரன்,மாநில விவசாயிகள் சங்க துணை தலைவர் லகுமையா ஆகியோர் கண்டனவுரை ஆற்றினர்.

முன்னதாக ஓசூர் உழவர் சந்தையிலிருந்து சி.பி.ஐ.கட்சியினர் ஊர்வலமாக சென்று சப்கலெக்டர் ஆபீஸ் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் நடை பாதை சங்க மாவட்ட வெங்கடேசப்பா, சி.பி.ஐ.கட்சியினர்,ஆட்டோ சங்கத்தினர் மற்றும் உழவர் சந்தை வியாபாரிகள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உழவர் சந்தையை திறக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.

இந்நிலையில் அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த டி.எஸ்.பி.முரளி தலைமையிலான போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினர்.இதை தொடர்ந்து ஓசூர் சப்கலெக்டர் ஆபீஸில்.ஆர்.டி.ஓ.குணசேகரன் முன்னிலையில் டி.எஸ்.பி.முரளி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். 

இதில் கலெக்டர் மற்றும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து கூடிய விரைவில் பொங்கலுக்கு முன்பாக உழவர் சந்தையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக ஆர்.டி.ஓ.உறுதி கூறியதன் பேரில் முற்றுகை போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.