மக்கள் இயக்க நிர்வாகிகளை வெளியேற்ற நடிகர் விஜய் போலீசில் புகார்
நடிகர் விஜய் கடந்த சில நாட்களாக பல வித சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது சிலரது விருப்பமாக இருக்கும். அதே போல் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அனைவரும் விரும்பினார். அவரும் தனது படங்களில் இன்றைய அரசியலை வைத்து பல “பஞ்ச்” வசனங்கள் பேசி வருகிறார். அவரது அனைத்து படங்களிலும் இது போன்ற வசனங்கள் இடம் பெரும்.
அப்படி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அவர் திடீர் என்று தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இது அரசியல் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து விஜயின் தந்தை மற்றும் இயக்குனருமான சந்திரசேகர் கட்சி ஒன்றை துவங்கினார். இதனால் அவரது ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
நடிகர் தரப்பில் இருந்து கூறப்பட்ட காரணம்:
ஆனால், விஜய் தரப்பில் இருந்து அந்த கட்சிக்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். இதனால் இந்த சர்ச்சை ஓய்ந்தது.
இதனை அடுத்து மீண்டும் அவரது தந்தை ஒரு புது கட்சியினை துவங்கினார். இது இந்நிலையில், நடிகர் விஜய் போலீசில் ஒரு புகாரை அளித்துள்ளார்.
நடிகர் விஜய்க்கு சாலிகிராமத்தில் சொந்தமாக ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ரவிராஜா, ஏ.சி.குமார் என்ற இருவர் தங்கியிருந்துள்ளனர். தற்போது அவர்கள் இருவரும் அந்த பொறுப்புகளில் இருந்து நீக்கபட்டு விட்டனர். இதனை அடுத்து அவர்கள் வீட்டினை காலி செய்ய சொல்லி விஜய் வலியுறுத்திய போது இவர்கள் மறுத்ததால் நடிகர் விஜய் தரப்பில் இருந்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.