அமித்ஷா சென்னை வருகை திடீர் ரத்துக்கு காரணம் என்ன...?
அமித்ஷா சென்னை வருகை திடீர் ரத்துக்கு காரணம் ன்ன...?


  

அமித்ஷாவின் சென்னை வருகை ரத்தாகிவிடவும், ஏற்கனவே  போடப்பட்டிருந்த பல பிளான்கள் அதிமுக கூட்டணியில் அப்படியே நொறுங்கிவிட்டன.. அமித்ஷா ஏன் சென்னை வரவில்லை என்ற கேள்வியும் எழுகிறது. வரும் 14-ம் தேதி அமித்ஷா துக்ளக் ஆண்டு விழாவில் பங்கேற்பதாக தமிழகம் வர இருப்பதாக செய்திகள் வெளியாகியது.. அப்படி சென்னை வரும் அமித்ஷா நிச்சயம் 3 விஷயங்கள் குறித்து பேசுவார் என்றும் அந்த 3 விஷயங்களினால் தமிழக அரசியலின் களம் நிச்சயம் வேறு லெவலுக்கு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி, அதிமுக கூட்டணியில் சீட் பேரம், தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி பேசி முடிவு எடுக்கப்படும், அத்துடன் இழுபறியில் உள்ள முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்பட்டது. அமித்ஷா வருகிறார் என்பதால்தான், அதிருப்தியில் இருந்த ஓபிஎஸை சந்தித்து பேசி, ஒரே காரில் பயணம், ஒரே காரில் பிரச்சாரத்தை முதல்வர் மேற்கொண்டார்.. ஓபிஎஸ்ஸை வைத்து பாஜக தலைமையிடம் சுமூகமாக பேசி முடிக்க போடப்பட்டிருந்த பிளானும் இப்போது சொதப்பல் ஆகிவிட்டது.

அப்படி சந்திக்கும் பட்சத்தில் ரஜினியை வாய்ஸ் தரும்படி கோரிக்கை விடுக்கலாம் என்றும் எதிர்பார்ப்புகள் எழுந்தன. அதனால்தான் இந்த முறை அமித்ஷாவின் வருகை தமிழக அரசியலில் ஒரு தாக்கத்தை தரும் என்றும் சொல்லப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில்தான், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தனது விசிட்டை கேன்சல் செய்துள்ளதாக டெல்லி வட்டாரங்கள் ஒரு தகவலை தெரிவித்தன.. 

எதற்காக இந்த திடீர் கேன்சல் என்று பரபரக்கப்பட்ட நேரத்தில், அதிமுக - பாஜக கூட்டணி விவகாரத்தில் மோதல் என்கிற விமர்சனத்தையும் அதிகப்படுத்தியது.. அட்வைஸ்கள் பிறகுதான், நாடு முழுவதும் பிரிட்டனில் பரவி வரும் மரபணு மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் பரவி வருவதாலும், ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த அமித்ஷா இந்த மாதிரி சூழலில் தமிழகம் செல்வது சரியாக இருக்காது என்றும் அட்வைஸ்கள் தரப்பட்டுள்ளன.. 

அதனாலேயே அவர் வருகையை ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையா? அதேசமயம், இன்னொரு தகவலும் வெளியாகி வருகிறது.. அமித்ஷாவுக்கு பதிலாக ஜேபி நட்டா சென்னை வருகை தர வாய்ப்பு என்றும் சொல்கிறார்கள்.. இந்த எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது.. ஆனால், ஏற்கனவே பாஜக தேசியத் தலைவர் நட்டா தமிழகம் வருவதாக அறிவிக்கப்பட்டு, அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதன் காரணமாகத்தான் ரத்து செய்யப்பட்டது.. இப்போது சென்னைக்கு மறுபடியும் நட்டாவே வரக்கூடும் என்கிறார்கள்.

ஒருவேளை நட்டா வந்தாலும், அதிமுக கூட்டணி பிரச்சனை முடிவு குறித்து ஆலோசனை நடத்துவாரே தவிர, அமித்ஷாவை கேட்காமல் எந்தவித உறுதியையும் தந்துவிட மாட்டார் என்றே தெரிகிறது.. அதனால் இந்த முறை நட்டாவின் வருகையும், வெறும் துக்ளக் விழா பங்கேற்போடு முடிந்துவிடக்கூடும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.