முன்கூட்டியே தேர்தலுக்கு வாய்ப்பு குறைவு
தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்பு குறைவு என தமிழக தேர்தல் கமிஷனர் சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது: தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்கூட்டியே வாய்ப்பு குறைவு. கூடுதல் ஓட்டுச்சாவடிகளை கண்டறியும் பணி நடந்து வருவதால் முன்கூட்டியே தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை. ஒரு ஓட்டுச்சாவடியில் ஆயிரம் பேர் ஓட்டளிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. 67 ஆயிரமாக உள்ள ஓட்டுச்சாவடி எண்ணிக்கையை 95 ஆயிரமாக அதிகரிக்க திட்டம் உள்ளது.

இதனால், கூடுதல் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளன. மஹாராஷ்டிரா, ம.பி.,யில் இருந்து தமிழகத்திற்கு கூடுதல் இயந்திரங்கள் கொண்டு வரப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.