த.மா.க. பிரமுகர் காங்கிரசில் இணைப்பு

த.மா.க. பிரமுகர் காங்கிரசில் இணைப்பு  தமிழ் மாநில காங்கிரஸை சேர்ந்த ஈரோடு ஆசிரியர் ஈ.பி.சுப்பிரமணியன் தன்னை தாய் கட்சியான இந்திய தேசிய காங்கிரஸில்   ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி அவர்களை சந்தித்து    தன்னை காங்கிரஸ் கட்சி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் இணைந்து கொண்டார்.!

தமிழ் மாநில காங்கிரஸ் பாசிச பாஜக வின் எடுபிடியாக முழுமையாக  மாறிவிட்டது இதை ஜீரணிக்க முடியாமல் தவித்த நான் இன்று எனது தாய் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதாக கட்சியினர் முன்பு பேசினார்.

இந் நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் ஈ. ஆர். ராஜேந்திரன்,ஈரோடு மாநகராட்சி முன்னாள் துணை மேயர் பாபு என்கிற வெங்கடாசலம் ,பொது செயலாளர்கள் டி.கண்ணப்பன், ம.முகமது அர்சத், ஏ.வின்சென்ட்,

கராத்தே யூசுப்,நெசவாளர் அணி மாவட்ட தலைவர் மாரிமுத்து விவசாய அணி தலைவர் பி.ஏ.பெரியசாமி, மண்டலத்தலைவர்கள் திருசெல்வம் ,எச்.எம்.ஜாபர் சாதிக் மற்றும் சிறுபான்மைத்துறை துணைத்தலைவர் 

கே என் பாஷா,செயலாளர் ராஜாஜிபுரம் சிவா மஞ்சள் மண்டி ராஜகோபால் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.