இன்று முதல் விடிய விடிய பணம் அனுப்பலாம்!
ஆர்டிஜிஎஸ் முறையில் இன்று முதல் 24 மணி நேரமும் நீங்கள் பணம் அனுப்பலாம்.

- இந்த நடைமுறையில் பரிவர்த்தனை மேற்கொள்வதில் சிக்கல் இருந்ததால் வாடிக்கையாளர்களுக்கு பணம் செலுத்துவதற்கு வசதியாக 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவைகள் கிடைக்க ரிசர்வ் வங்கி முடிவு செய்தது. அதன்படி, டிசம்பர் 1 முதல் 24 மணி நேரமும் ஆர்டிஜிஎஸ் சேவைகளை இனி நாம் பெறலாம். ஆர்டிஜிஎஸ் மூலம் பெரிய தொகையை மாற்றலாம். ரூ.2 லட்சத்துக்கு மேல் எவ்வளவு பெரிய தொகையையும் நீங்கள் இதில் அனுப்ப முடியும்.