அடிப்படை வசதி கேட்டு செயல் அலுவலரை பொதுமக்கள் முற்றுகை..

 அடிப்படை வசதி கேட்டு செயல் அலுவலரை பொதுமக்கள் முற்றுகை..தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள தேவதானப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 16 வது வார்டு பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தையும், செயல் அலுவலரையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கடந்த சில நாட்களாக பேரூராட்சியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்றும், 11 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும், குடிநீர் இன்றி பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் குறை கூறினர். மேலும் இப்பகுதியில் பன்றிகளின் தொல்லைகளை பேரூராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தவில்லை என்றும், பன்றிகளால் பரவும் நோய்த் தொற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதியை கூட இப் பேரூராட்சி நிர்வாகம் செய்யவில்லை எனவும் குற்றம் சாட்டினர். பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு பேரூராட்சி நிர்வாகம் தீர்வு காணுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றனர். 

தேனி மாவட்ட செய்திக்காக அ வெள்ளைச்சாமி