கிருஷ்ணகிரியில் கொடிகட்டி பறக்கும் மூணாம் நம்பர் லாட்டரி வியாபாரம்

 கிருஷ்ணகிரியில் கொடிகட்டி பறக்கும் மூணாம் நம்பர் லாட்டரி வியாபாரம்கிருஷ்ணகிரி பழையபேட்டை காந்திசிலை அருகில் மற்றும் லண்டன் பேட்டையில் உள்ள சில கடைகளில் மூணாம் நம்பர் லாட்டரி தினமும் பல லட்ச ரூபாய்களுக்கு விற்பனையாகி வருகிறது இந்த விற்பனையில் கார்த்திக் சரவணன் கோவிந்தன் அவரது சகோதரர் காமராஜ் மற்றும் மதுரை செல்வம் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவின் தலைவர் மதுரை செல்வம் கிருஷ்ணகிரி பகுதியில் கட்டாய கந்து வட்டியில் ஈடுபட்டுள்ளாா். இதை வைத்து மதுரையில் மிக பிரம்மாண்டமான வீடு கட்டி வருகிறார்.

இவர்களை கிருஷ்ணகிரி நகர காவல் ஆய்வாளர் பாஸ்கரன் பலமுறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளாா்.

காவல்துறை என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் இவர்கள் தங்களின் நடவடிக்கைகளை மாற்றிக் கொள்வதாக தெரியவில்லை தினந்தோறும் இவர்களின் தொழில் வேகமாக வளர்ந்து வருகிறது இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களில் வைத்து தினமும் இந்த மூணாம் நம்பர் லாட்டரி விற்று வருகின்றனர் இதனால் பல குடும்பங்கள் நடுத்தெருவுக்கு வந்து விட்டன எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் தள்ளி நாள் தான் எங்களின் வாழ்வு வளம் பெறும் என்கின்றனர் லாட்டரிக்கு  அடிமையானவர்களின் மனைவிமார்கள்.  மாவட்ட எஸ்.பி. தகுந்த நடவடிக்கை எடுப்பாரா....?

மூர்த்தி கிருஷ்ணகிரி