ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  "தமிழகம் மீட்போம் 2021

ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  "தமிழகம் மீட்போம் 2021தி.மு.க .தலைவர் ஸ்டாலினின்" தமிழக மீட்போம் 2021" காணொளி கூட்டத்தில்  பவானியில் நகரச் செயலாளர் பா.சி. நாகராஜன் தலைமையில் தி.மு.க.வினர் பங்கேற்றனா். 


  ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின்  "தமிழகம் மீட்போம் 2021 "என்ற தலைப்பில் தி.மு.க.வினர் இடையே காணொளி மூலம் சிறப்புரையாற்றினார்.


 இவ்விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றிய கட்சியின்  முன்னோடிகளுக்கு கட்சியின் சார்பாக    பொற்கிழி மற்றும் தலா 10 ஆயிரமும் நினைவுப் பரிசுகளும் ஈரோடு மாவட்டம் முழுவதும் 137 பேருக்கு கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விழாவில் தி.மு.க .துணைப் பொதுச் செயலாளர், ஈரோடு வடக்கு ,தெற்கு, மாவட்ட செயலாளர்கள் சிறப்புரையாற்றினர் .


பவானி நகரத்தின் சார்பாக பவானி நகரச் செயலாளர் பா.சி. நாகராஜன் தலைமையில், நகர அவைத்தலைவர்  செல்வராஜூ, நகரப் பொருளாளர் நல்லசிவம், மாவட்ட பிரதிநிதி ராஜசேகர், நெசவாளர் அணி அமைப்பாளர் கே சரவணன், நகரத் துணைச் செயலாளர் சி. பிரகாஷ், செந்தில், வி.ரவி, சின்னம்மாள், இந்திரஜித் ,இளைஞர் அணியில் சுப்பிரமணி, வர்த்தக அணியில் சாவி ராஜா, குமாரசாமி ,மாதேஸ்வரன், சத்குரு, செல்வராஜ் ,சரண், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் யுவராஜ், இளைஞரணி அமைப்பாளர் ராஜேந்திரன், தவமணி முன்னாள் இளைஞர் அணி அமைப்பாளர்,குப்புசாமி, மீன் ராஜா, யாழினி ஜெகதீஸ், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கட்சித் தொண்டர்களும் கலந்து கொண்டனர்


யோகேஸ்வாி, ஈரோடு,