உண்மை ஓடி நடப்பதற்குள் பொய் உலகைச்சுற்றி வந்து விடுகிறது...! பிரதமா் மோடி ராணுவ வீரா்களை சந்தித்த விவகாரம்.....!!
பாரதப்பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களை மருத்துவமனையில் சந்தித்ததை குறித்த பொய் செய்திகள் தீய நோக்கம் கொண்டவை மற்றும் துரதிருஷ்டமானவை என்று இந்திய இராணுவம் வன்மையாக கண்டித்துள்ளது.
பொய்: காயப்பட்ட இராணுவ வீரர்களை பார்க்க மோடி சென்றது மருத்துவமனை அல்ல அது ஒரு கான்ஃபரன்ஸ் ஹால். போட்டோ எடுப்பதற்காக ராணுவவீரர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அனைத்துமே மோடிக்காக செயற்கையாக உருவாக்கப்பட்டது.
உண்மை: அந்த இடம் ராணுவ மருத்துவமனைக்கு உள்ளே அமைந்துள்ள கான்பரன்ஸ் ஹால். அந்த இடம் சில மாதங்களுக்கு முன்பு, கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்த உருவாக்கப்பட்ட Isolation ward-ஆக மாற்றப்பட்டது. அங்கு இப்போது கடந்த சில வாரங்களாக ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சென்ற மாதம் 23-ஆம் தேதி இந்திய இராணுவத்தளபதி இதே இடத்தில்தான் காயப்பட்ட ராணுவ வீரர்களை சந்தித்து உரையாடியுள்ளார்.
பொய் : அங்கிருந்தவர்கள் காயப்பட்ட ராணுவ வீரர்கள் அல்ல. யார் கை கால்களிலும் பேண்டேஜ் இல்லை; ட்ரிப்ஸ் பாட்டில்கள் இல்லை; மருந்துகள் இல்லை.
உண்மை: அதிகமாக காயம்பட்ட ராணுவ வீரர்கள் சிறப்பு மருத்துவமனை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கு இருப்பவர்கள் சிறிய காயத்திற்கு சிகிச்சை எடுத்து வருபவர்கள். சிலர் பேண்டேஜ் அணிந்திருந்தாலும் அவர்கள் அதற்கு மேல் உடை அணிந்திருந்தனர்.
பொய்:. ராணுவ வீரர்கள் பிரதமரின் வருகைக்காக விரைப்பாக அமர்ந்திருக்க கட்டாயப் படுத்தப்பட்டுள்ளனர்.
உண்மை: இந்திய ராணுவத்திற்கு என்று ஒரு சில சட்டதிட்டங்கள் உள்ளன; வீரர்கள் அதன்படியே நடந்து கொள்கிறார்கள். பிரதமர் வரும்போது அவருடன் ராணுவ உயர் அதிகாரிகளும் வருவார்கள். பிரதமர் மற்றும் ராணுவ அதிகாரிகளுக்கு உரிய மரியாதை கொடுக்கும் விதமாக, யாரால் இயலுமோ அந்த ராணுவ வீரர்கள் விரைப்பாக அமர்கிறார்கள். ஆபத்தான நிலையில் இருக்கும் / அதிக காயம்பட்ட வீரர்களுக்கு இந்த வழி முறைகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வரும் ராணுவ வழிமுறைகளை கொச்சைப்படுத்துவது அநாகரிகம்.
முதலில் அபிஷேக் தத் என்ற காங்கிரஸ் தலைவர், "பாரதப் பிரதமர் மோடி ராணுவ வீரர்களை பார்த்தது அனைத்தும் ஏமாற்று வேலை என்று பதிவிட்டார்". அதன்பிறகு காங்கிரஸ் மற்றும் அதன் கைக்கூலிகள் இந்த பொய்யை இந்தியா முழுவதும் சமூக வலைதளங்கள் மூலம் பரப்பத்துவங்கினர். காங்கிரஸ் ஆதரவு சுமந்த் சி ராமன் போன்ற பலர் இதை பரப்புவதற்கு உதவி செய்தனர். மோடியை கேலி செய்கிறோம் என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அவமானப் படுத்தியுள்ளனர். இந்தியா முழுவதும் இந்த பொய் செய்தி பரப்பப்பட்டதால் வேறு வழியில்லாமல் இந்திய ராணுவம் இந்த வதந்தியை கண்டித்து அறிக்கை விட்டது.
Following is the press release by the Indian Army:
There have been malicious and unsubstantiated accusations in some quarters regarding the status of the facility visited by the Prime Minister Shri Narendra Modi during his visit to the General Hospital at Leh on July 03, 2020. It is unfortunate that aspersions are being cast on how our brave Armed Forces are treated. The Armed Forces give the best possible treatment to their personnel. It is clarified that the said facility is part of the Crisis Expansion capacity of 100 beds and is very much part of the General Hospital complex. The COVID-19 protocol had necessitated some wards of the General Hospital to be converted into isolation facilities. Hence, this hall which otherwise was normally used as a Training Audio Video Hall was converted into a ward ever since the hospital was also designated as COVID treatment hospital. The injured braves have been kept there since their arrival from Galwan to ensure quarantine from COVID areas. The Chief of Army Staff General M M Naravane and the Army Commander have also visited the injured braves in the same location.
ஓய்வு பெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் சையத் அடா ஹஸ்னைன், "எனக்கு இந்த மருத்துவமனையை பற்றி நன்கு தெரியும், பொய்யான குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள்" என்கிறார்.
எல்லைகளில் போர் மேகங்கள் சூழ்ந்து வரும் இந்த வேளையில் ராணுவ வீரர்களை உற்சாகப்படுத்தும் நோக்கோடு பாரதப் பிரதமர் மோடி லடாக் சென்று இருக்கும் இந்த வேளையில் இராணுவ வீரர்களை கொச்சைப் படுத்துவது போல காங்கிரஸ் பொய் தகவல்களை பரப்பி வருகிறது.
"காங்கிரஸ் சொன்ன பொய்களின் அர்த்தம் என்ன தெரியுமா? பொய்யான மருத்துவமனையை இந்திய ராணுவம் உருவாக்கியது. காயம் அடையாத இந்திய ராணுவ வீரர்களை போட்டோ எடுப்பதற்காக அந்த பொய்யான மருத்துவமனையில் இந்திய ராணுவம் அனுப்பியது. இந்தப் பொய்க்கு இந்திய ராணுவ அதிகாரிகள் துணை போயுள்ளனர்."
"இந்திய ராணுவத்தை இதைவிட கேவலமாக யாருமே பேச முடியாது. இந்திய ராணுவத்தை காங்கிரஸ் கட்சி மோசமாக அவமானப்படுத்தி இருக்கிறது. இதற்கெல்லாம் காங்கிரஸ் கட்சி இந்திய மக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்"
"எந்த ஒரு நாட்டு ராணுவத்திற்கும் சொந்த நாட்டு எதிர்கட்சி தலைவர்களின் கீழ்தரமான அரசியல் காரணத்தினால் இப்படி ஒரு விளக்கம் கொடுக்கும் துரதிருஷ்டம் வரக்கூடாது".. என்கிறார் பாஜகவின் K.T. ராகவன்.
- பத்மநாபன் நாகராஜன்