ஆண்டிபட்டியில் சாயப்பட்டறை கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

ஆண்டிபட்டியில் சாயப்பட்டறை கழிவு நீரால் தொற்று நோய் பரவும் அபாயம். நடவடிக்கை எடுக்க கோரிக்கை.



தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேரூராட்சிக்குட்பட்ட ஜக்கம்பட்டி பகுதியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீடுகளிலேயே சாயப்பட்டறைகளை வைத்து குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். 


இந்த சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் முறையாக சுத்திகரிக்கபடாமல் பொது வடிகாலில் கலந்து செல்கிறது. இதனால் நிலத்தடி நீர் மட்டம் மாசு அடைந்து தொற்று நோய்கள் உற்பத்தியாகும் பகுதியாகவும் காணப்படுகிறது.
மேலும் இப்பகுதியில் சாயப்பட்டறைகளுக்குத் தேவையான நீரை இரவு பகல் பாராமல் உறிஞ்சப்படு வதால் வீடுகளில் அமைக்கப் பட்டுள்ளஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் இது சம்பந்தமாக ஆண்டிபட்டி பேரூராட்சி, மாவட்ட ஆட்சியர் போன்ற அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு அனுமதியின்றி ஜக்கம்பட்டியில் சாயப்பட்டறைகள் இயங்கி வருகிறது. மேலும் சாயப்பட்டறை கழிவுகள் சுத்திகரிப்பு செய்யப் படாமல் நேரடியாக பொது வடிகால் கால்வாயில் கலக்கிறது. இது சம்பந்தமாக மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்தல ஆய்வு குறித்த அறிக்கை  அனுப்பப்பட்டு நடவடிக்கை கிடப்பில் இருந்ததால்
மீண்டும் சாயப்பட்டறை சம்பந்த மாக கடந்த பிப்ரவரி 2ம் தேதி அன்று மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டது.


பின்னர் இது சம்பந்தமாக மீண்டும் மாவட்ட சுற்றுச்சூழல் அதிகாரி மற்றும் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ஸ்தலம் ஆய்வு செய்து சாயப்பட்டறைகள் அனைத்தும் ஆண்டிபட்டி பேரூராட்சி குடியிருப்பு பகுதியில் உள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். ஆனால் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முன் வரவில்லை. மேலும் அரசே, ஈரோடு மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட நெசவுத் துணிகளை, இப்பகுதியில் உள்ள சாயப் பட்டறைகளில் தாராளமாக நாள்தோறும் சாயம் போட்டு வருகின்றனர்.


இதனால் இப்பகுதியிலுள்ள சாயப்பட்டறை தொழிற்சாலையி லிருந்து பல ஆயிரம் லிட்டர் கழிவுநீர் பொதுகால்வாயில் கலக்கிறது.ஏற்கனவே சிக்கன்குனியா காலரா உள்ளிட்ட வைரஸ் நோய்களால் அவதி அடைந்து வரும் பொது மக்களுக்கு தற்பொழுது கொரோனா பீதியிலும்  உள்ளனர்.


இந்த சூழலில் மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் தொற்று நோயிலிருந்து பாதுகாத்திட சக்கம்பட்டி பகுதியிலிருந்து வெளியேறும் சாயப்பட்டறை கழிவுகளை முறைப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தனர். 


தேனி மாவட்ட நிருபர் அ வெள்ளைச்சாமி