இராயக்கோட்டையில் ஒரு தாஜ்மஹால்.... இது ஒரு வரலாற்று சுவடு....
ஆங்கிலேயர்களுக்கும் திப்புவிற்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.. திப்புவின் படைகள் இராயக்கோட்டையின் மலை மேல் முகாமிட்டிருந்தன. கோட்டையின் கீழே மேஜர்.கௌடியின்தலைமையில் கும்பெனி படைகள் மலைக் கோட்டையை கைப்பற்ற கடுமையான போரில் ஈடுபட்டிருந்தன.
திப்புவின்கில்லேதாரர்களில் ஒருவரான சலாபத்கானின் தலைமையில் திப்புவின் படைகள் கோட்டையை காத்து நின்றன.கும்பெனி படையில் ஜான் கேம்பல் #குளோவர் என்ற இளைஞன் பணியில் இருந்தான். ஏற்கனவே பர்மா போரில் கலந்து கொண்ட குளோவர் அங்கு பீரங்கி குண்டு தாக்கப்பட்டு ஒரு கையை இழந்தான்.
போரிட இயலாத நிலையில் இருந்த அவனுக்கு இராயக்கோட்டையில் படைவீரர்களுக்கு ஊதியம் வழங்கும் பணியையும் மற்றும் பஞ்சப்பள்ளியில் பல ஏக்கர் நிலங்களையும் ஆங்கில கும்பெனி வழங்கியிருந்தது.
ஆகா ஜமாலுதீன் என்பவர் இராயக்கோட்டையில் குடியிருந்தார். அவருக்கு #அமீருன்னிசா என்ற அழகிய மகள் ஒருத்தி இருந்தாள். திடீரென ஆங்கிலப் படைகள் மறுநாள் மலைக் கோட்டையைக் கைப்பற்றின. கோட்டையை அடைவதற்கான யுக்தியை ஜமாலுதின் கூறியதாக கருதிய திப்புவின் வீரர்கள் அவரைக்கொன்றனர். நிர்க்கதியாக நின்ற அமீருன்னிசாவைக் காப்பாற்றி ஆதரவளித்தார் குளோவர். ஆதரவு பின்னர் காதலாக மாறியது. அவளைத் திருமணம் செய்து கொள்வதற்காக இசுலாத்தைத் தழுவினார் குளோவர்.
பஞ்சப்பள்ளியில் பங்களா ஒன்றைக் கட்டி இல்லற வாழ்க்கையைத் தொடங்கினர்.நாட்கள் பல உருண்டோடின.எதிர்பாரத விதமாக கடுமையான நோயொன்றாள் பாதிக்கப்பட்டாள் அமீருன்னிசா. எவ்வளவு போராடியும் நோய் குணமாக
நிலையில் தனது இறுதி ஆசையொன்றை குளோவரிடம் வெளியிட்டாள்.
தான் இறந்த பிறகு தான் அடக்கம் செய்யப்படும் இடத்தில் தனக்கு நினைவுச் சின்னம் ஒன்றை எழுப்ப வேண்டும் என்று கூறியதோடு இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த ஈத்கா ஒன்றையும் கட்ட வேண்டுமென்றாள். அவள் இறந்த பின்னர் இராயக்கோட்டை மலைக்கு எதிரே இந்த இரண்டு சின்னங்களையும் எழுப்பிய குளோவர் அங்கேயே
பொழுதைக் கழித்தார்.
துறவியைப் போல திரிந்த அவர் தனது வயலில் விளைந்த தானியங்களை #ஜக்கேரி என்ற ஊரில் உள்ள பெரிய ஆலமரத்தில் (தற்போதும் உள்ளது) உள்ள பறவைகளுக்கு இறைப்பாராம். பித்துப் பிடித்தவர் போல சுற்றித் திரிந்த குளோவர் ஓசூர் மத்திகிரி கால்நடைப் பண்ணை அருகே மரணமுற்றார். அவரது சமாதியை இன்றும் அங்கு காணலாம்.
இராயக்கோட்டை -ஓசூர் சாலையில் இன்றும் அமிருன்னாசாவின் #தாஜ்மகாலையும் ஈத்காவையும் காணலாம்.
#அறிமுகப்பார்வை: கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு உட்பட்ட, #ராயக்கோட்டை பகுதிக்கு மற்றொரு பெயர்
#பாராமஹால் ஆகும்.
ராயக்கோட்டையை தலைமையிடமாக கொண்டு, ஜெகதேவி, ராயக்கோட்டை,
நாகமலை, மத்தூர், மல்லப்பாடி, தட்டக்கல், கிருஷ்ணகிரி,மகாராஜகடை, சுகனகிரி, வீரபத்திரதுர்க்கம், போளுதிம்மராயதுர்க்கம், காவேரிபட்டணம் ஆகிய, 12 பகுதிகளில் கோட்டைகள் கட்டி, அரசாட்சி செய்தவர் ஜெகதேவராயர் ஆவார். இயற்கையானகுகை அமைப்பும், பரந்து விரிந்த மலைக்கோட்டையும் கொண்ட ராயக்கோட்டையில் இருந்து,ஆறு பாராமஹால் பகுதியை கட்டுப்படுத்த முடிந்ததால், 15ம் நூற்றாண்டு முதல்,19ம் நூற்றாண்டு வரை, ராயக்கோட்டை தலைமை இடமாக செயல்பட்டது.
ஜெகதேவராயருக்கு பின்னர் முஸ்தபாகான், மராட்டியர்கள், கஸ்பீர்கான், ஆலம்கீர், நவாப்அப்துல்நபி, அப்துல் முகமது கான், அப்துல் மூசுப்கான், அப்துல்
முசாத்கான், பீனா விசாஜி பந்த், ஐதர்அலி, மைசூர் உடையார்கள்,திப்பு சுல்தான் ஆகியோர், ராயக்கோட்டையை தலைமையிடமாக
கொண்டு, பாராமஹால் பகுதியை ஆட்சி செய்து வந்தனர்.
கடந்த, 1782ம் ஆண்டு, மேஜர் கவுடியின் தலைமையில், திப்பு சுல்தான்மீது பீரங்கி சண்டைகளை நடத்திய ஆங்கிலேயர், ராயக்கோட்டையை தங்கள்
வசப்படுத்தினர். அதையடுத்து, மலைக் கோட்டையை அழிக்காமல்,
ஏழாவது மதராஸ் பட்டாலியனை, பாதுகாப்பு படையாக கோட்டையில் அமர்த்தினர்.
ராயக்கோட்டை ஆங்கிலேய ராணுவ தலைமையிடமாக, 1861ம்ஆண்டு வரை இருந்து, பின்னர் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆங்கிலேயர்களின் தலைமையிடமாக
ராயக்கோட்டை இருந்ததால், ராயக்கோட்டையை ஒரு மாவட்டமாகவும்,
சேலத்தை மற்றொரு மாவட்டமாகவும் பிரித்தனர். இரு மாவட்டத்திற்கும்,
கலெக்டராக கேட்டன் ரிப் பொறுப்பேற்றார்.
ராயக்கோட்டைக்கு மட்டும் கிரகாம் என்பவர் சப்கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
ராயக்கோட்டை தாலுகாவின் தாசில்தார் அப்போஜிராவ், சிராசுதார் வாசுதேவராவ், ராணுவ படை கர்னல் ஷேசய்யா, ஆகியோர் மூலம் ராயக்கோட்டை மாவட்டம் கம்பீரமாக செயல்பட்டு வந்தது.
ஆங்கிலேயர் ஆட்சி முடிவுக்கு வந்த பின்,ராயக்கோட்டை மாவட்டத்தை ஒன்றிணைத்து சேலம் மாகாணமாக மாற்றப்பட்டது. பின்னர், 1965 ஆம் ஆண்டு தர்மபுரி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. 2004 ம் ஆண்டு கிருஷ்ணகிரி தனி மாவட்டம் ஆனது. ஆனால், கம்பீரமாகசெயல்பட்டு வந்த ராயக்கோட்டை மாவட்டம் தற்போது, பேரூராட்சியாக மாறிவிட்டது. காலசுழற்சி காரணமாக, ராயக்கோட்டை பெருமை படிப்படியாக குறைந்து வருகிறது