பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.35 கோடி.. கொரோனா வாரியர்ஸ் பாடல்.. சபாஷ், ஏசியன் பெயிண்ட்ஸ்

பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.35 கோடி.. கொரோனா வாரியர்ஸ் பாடல்.. சபாஷ், ஏசியன் பெயிண்ட்ஸ்




கொரோனாவால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி மற்றும் பல்வேறு மாநில நிவாரண நிதிக்கு ரூபாய் 35 கோடி வழங்கி உள்ளது. அதேபோல் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் உதவியுடன் கொரோனா வாரியர்ஸ் பாடல் ஒன்றும் இயற்றப்பட்டுள்ளது.


இந்தியா முழுக்க கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பலவற்றில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா வாரியர்ஸ் என்று அழைக்கப்படும் முன்னிலை பணியாளர்கள்தான் மக்களுக்காக உழைத்து வருகிறார்கள். இவர்களை பாராட்டும் விதமாக இவர்களுக்கான பாராட்டு கீதம் ஒன்று இயற்றப்பட்டு உள்ளது. One Nation One Voice என்ற பெயரில் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது . கடந்த 17ம் தேதி இந்த பாடல் வெளியானது.


இந்த பாடலை உருவாக்கியதில் முக்கியமான ஸ்பான்ஸர் நிறுவனங்களில் ஒன்றாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் உள்ளது. Jayatu Jayatu Bharatam, Vasudev Kutumbakkam என்ற இந்த பாடல் 200 பாடகர்கள் மூலம் பாடப்பட்டுள்ளது. இந்திய பாடகர்கள் உரிமை சங்கம் (Indian Singers Rights Association -ISRA) ஒன்றாக இணைந்து 15 மொழிகளில் இந்த பாடலை இயற்றி உள்ளது.


சோனு நிகம், ஸ்ரீனிவாஸ், ஐஎஸ்ஆர்ஏ அமைப்பின் சிஇஓ சஞ்சய் தண்டான் ஆகியோர் கூட்டு முயற்சியில் இந்த பாடல் உருவாகி உள்ளது. இந்த பாடலை எல்லா பாடகர்களும் தங்கள் வீட்டில் இருந்தே பாடி வெளியிட்டு இருக்கிறார்கள். வீட்டில் பாடலை பாட சரியான கருவிகள் இல்லாமல் இருந்தும் கூட இந்த பாடலை அவர்கள் பாடியுள்ளனர்.


இதற்கு முன் இத்தனை பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடியது இல்லை. மொத்தம் 14 மொழிகளில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. ஆஷா போஷ்லே, அனுப் ஜலோடா, அல்கா யாக்கினிக், ஹரிஹரன், கைலாஷ் கேர் , கவிதா கிருஷ்ணமூர்த்தி, குமார் சானு, மஹாலக்ஷ்மி ஐயர் , மனோ, பங்கஜ் யூதாஸ், எஸ்பிபி, ஷான், சோனு ஜகம், சுரேஷ் வடகர், ஸ்ரீனிவாஸ், உதித் நாராயணன் , ஷங்கர் மஹாதேவன் என பல முன்னணி கலைஞர்கள் இதில் பாடி உள்ளனர் .


இது குறித்து ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் எம்டி மற்றும் சிஇஓ அமித் சைங்ல் தெரிவிக்கும் போது, மக்கள் மீது எப்போது அக்கறை கொண்ட நிறுவனம்தான் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம். நாம் எதிர்காலம் குறித்த சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் நாம் துணிச்சலாக முன்னே வந்து செயல் ஈடுபட வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் 200 கலைஞர்கள் தங்கள் மொழியில் பாடி வெளியிடும் இந்த வீடியோவை பாராட்டுகிறோம். இதற்கு ஒரு காரணமாக இருப்பதில் பெருமை அடைகிறோம்.


இந்திய நிறுவனம் என்ற வகையில் இந்தியர்களின் உழைப்பை மதிக்கிறோம். இதற்காக பிஎம் கேர் தொண்டிற்கு நாங்கள் உதவி செய்கிறோம். One Nation One Voice வெறும் பாடல் மட்டும் அல்ல. இது மக்களை ஒன்றிணைக்கும் இயக்கம். மக்களை ஒன்றாக சேர்க்கும் அமைப்பாக இந்த பாடல் இருக்கும்.


இந்த பாடல் மட்டுமின்றி, கொரோனாவால் இந்தியா முழுக்க பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பிரதமரின் பிஎம் கேர்ஸ் நிவாரண நிதி மற்றும் பல்வேறு மாநில நிவாரண நிதிக்கு ரூபாய் 35 கோடி வழங்கி உள்ளது. 100க்கும் மேற்பட்ட தளங்களில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. டிவி, வானொலி, மீடியா, OTT, VOD, ISP, DTH மற்றும் CRBT, 100க்கும் மேற்பட்ட ஒளிபரப்பு சேனல்கள், சமூக வலைத்தளம், தொழில்நுட்ப தளங்கள் இந்த செயலை ஆதரித்துள்ளது.


தமிழ், இந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், போஜ்பூரி, அசாமி, காஷ்மீரி, சிந்தி, ராஜஸ்தானி, ஓடியா ஆகிய மொழிகளில் இந்த பாடல் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த பாடலை வழங்குவதில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் பெருமை கொள்கிறது.

 

ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் 1942ல் தொடங்கப்பட்டு தற்போது இந்தியாவில் பெரிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ஆசியாவில் நான்காவது பெரிய நிறுவனமாக ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் உள்ளது. இதன் வருடாந்திர வருமானம் 192.48 பில்லியன் ரூபாய் ஆகும். மொத்தம் 15 நாடுகளில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் செயல்படுகிறது. அதேபோல் 60 நாடுகளில் பொருட்களை ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் விற்பனை செய்கிறது . பெயிண்ட் துறையில் ஏசியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் தற்போது கிங் போல செயல்பட்டு வருகிறது.