கிருஷ்ணகிரி மாவட்டம்
கிருஷ்ணகிரி :
கோயில் நகைகளை உருக்கி பிஸ்கட்டுகள் ஆக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்...
தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் பயன்பாட்டில் இல்லாத நகைகளை மத்திய அரசின் ஆலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகள் ஆக மாற்றி வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்
என தமிழக அரசு அறிவிப்பது அதற்கான முன்னேற்பாடு பணிகளை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மேற்கொண்டு வருகிறார் இந்த நிலையில் தமிழக அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
அதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரில் திருக்கோயில் நகைகளை உருக்கி தங்க பிஸ்கட்டுகள் ஆக மாற்றும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்
நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி நகர தலைவர் கலைகோபி தலைமையில் நடைபெற்றது
ஆர்ப்பாட்டத்தில்
பி ஜே பி மாநில செயற்குழு உறுப்பினர்கோட்டிஸ்வரன்,, இந்து முன்னணி மாவட்ட தலைவர் யோகேஸ்வரன்.
பிஜேபி கட்சியின் மாவட்ட தலைவர் தர்மலிங்கம், டெம்போ முருகேசன், பிரச்சார தலைவர் டாக்டர் சக்தி ஆர் மனோகரன், மண்னன் சிவா, சிவனடியார் சீனிவாசன் , நகர தலைவர் ரமேஷ், அறிவுசார் பிரிவு தலைவர் ஆசிரியர் நல்லசாமி, நகர தலைவர் ரமேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி செய்தியாளர் அம்முதாஸ்