7 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் துவக்கிவைத்தார்
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிக்கல் கிராமத்தில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் திரு. ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் அவர்கள் அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 7 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்துகளின் இயக்கத்தை துவக்கிவைத்தார். இதில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சங்கர்லால் குமாவத் அவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே நவாஸ்கனி அவர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. காதர்பாட்சா முத்துராமலிங்கம்,(ராமநாதபுரம்) அவர்கள் திரு. முருகேசன் (பரமக்குடி) அவர்கள் உடன் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு