வண்ண மணல்களை கொண்டு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், திருவுருவப்படத்தை வரைந்து, சாதனை...!
திருநெல்வேலியில்வண்ண மணல்களை கொண்டு, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின், திருவுருவப்படத்தை வரைந்து, சாதனை படைத்த, ஓவியப்பள்ளி மாணவிகள்!
செப்.3:- இந்திய சுதந்திர போராட்ட வீரர், "கப்பலோட்டிய தமிழன்" வ.உ.சிதம்பரனாரின், 150-ஆவது பிறந்த தினவிழா, நாளை (செப்டம்பர.5) தமிழகமெங்கும், கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி, 150 சதர அடி பரப்பளவு உள்ள, கதர் துணியில், திருநெல்வேலியில் இயங்கி வரும், முன்னணி ஓவியப்பள்ளிகளுள் ஒன்றான, "சிவராம் கலைக்கூடம்" இளம் மாணவிகளான, எஸ்.சிந்துஜா மற்றும் ஆர்.தீக்சனா ஆகிய இருவரும் இணைந்து, வ.உ.சி.யின், திருவுருவப்படத்தை, வண்ண மணல் கொண்டு,சுமார் 2 மணி நேரத்திற்குள், மிகவும் கச்சிதமாக வரைந்து, காண்போரின் கவனத்தை, வெகுவாக ஈர்த்து, சாதனை படைத்துள்ளனர். நாட்டுப்பற்றினை ஒவ்வொருவர் மனத்திலும், வேரூன்றச்செய்திடும் வகையில், தேசத்தலைவர்களுள் ஒருவரான வ.உ.சி.படத்தை, வண்ணமணல்களில் வரைந்த மாணவிகள் இருவரையும்,மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு உட்பட, பலரும் பாராட்டி, மகிழ்ந்தனர்.
