தகவல் இல்லை என்று சொல்வது RTI சட்டத்திற்கு எதிரானது

தகவல் இல்லை என்று சொல்வது RTI சட்டத்திற்கு எதிரானது


மனுவில் கோரப்பட்ட தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை என்று மனுவை பெற்றுக் கொண்ட பொது தகவல் அலுவலர் அவர்கள் தெரிவிப்பது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(3)ன் கீழ் தவறானதாகும்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(3)

இச்சட்டத்தின் கீழ் மனுவை பெற்றுக் கொள்ளும் பொதுத்தகவல் அலுவலர் தங்கள் அலுவலகத்தில் அந்த தகவல் இல்லை என்றால், மனுவை பெற்றுக் கொண்ட நாளில் இருந்து ஐந்து நாட்களுக்குள் அதனை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துவிட்டு அதனை மனுதாரருக்கும் தெரிவிக்க வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(3)ல் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர் என்ன செய்ய வேண்டும்? 

இது போன்று நடந்து கொள்கின்ற பொது தகவல் அலுவலர் மீது தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 18(1)ன் கீழ் மாநில தகவல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம். 

தகவல் எங்கு கேட்க வேண்டும் என்று தெரியாதவர்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(1)ன் கீழ் மனு செய்யுங்கள். அங்குள்ள பொது தகவல் அலுவலர் ஐந்து நாட்களுக்குள் தங்களைது மனுவை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005 பிரிவு 6(3)ன் கீழ் அனுப்பி வைத்துவிட்டு அதனை தங்களுக்கும் தெரிவிப்பார். 

அதற்குப்பிறகும் தகவல் வழங்கவில்லை என்றால்...

அந்த கடிதம் தங்களுக்கு கிடைத்த 30 நாட்களுக்குள் தகவல்கள் ஏது கிடைக்கவில்லை என்றால், அந்த கடிதம் அனுப்பப்பட்ட அலுவலக உயர் அதிகாரியிடம் தாங்கள் முதல் மேல்முறையீட்டை சமர்ப்பிக்கலாம்.???