போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்த சமுதாய நலக்கூடம்

போக்குவரத்து துறை அமைச்சர் திறந்து வைத்த சமுதாய நலக்கூடம்


ராமநாதபுரம் ஆகஸ்ட்-21 

மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் தினைக்குளம் கிராமத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று காலை திறந்து வைத்தார்கள். உடன் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ. முருகேசன், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்  நவாஸ்கனி, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்கள், உள்ளார்கள். இதனை அடுத்து மாண்புமிகு போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் பரமக்குடி அருகே உள்ள அண்டக்குடி ஊராட்சியில் ரூ.1.66 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து 125 பயனாளிகளுக்கு ரூ.38.49 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு