ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி


மயிலாடுதுறை மாவட்டம் ஜோதி பவுண்டேஷன் சார்பில் ஆயிரம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியின் துவக்க விழா. 

ஜோதி பவுண்டேஷன் ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர் சாலையோரங்களில் வசிப்பவர்கள் என தினமும் உணவு வழங்கி வரும் ஜோதி பவுண்டேஷன். இயற்கை வளம் மண் வளம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு பனை விதை நடும் லட்சியத்தை கையில் எடுத்துள்ளதாக ஜோதி பவுண்டேஷன் நிறுவனர் ஜோதிராஜன் கூறினார். 

மயிலாடுதுறையின் துலா கட்ட காவிரி ஆற்றுப்படுகையில் ஓரம்  ஆரம்பிக்கப்பட்டு பூம்புகார் வரை 1000 பனை விதைகள் நடும் நிகழ்வு நடை பெற்றது, 

    ஆயிரம் பனை விதைகளை நடும் பணியில் ஜோதி பவுண்டேஷன் தலைவர் சேகர் தலைமையில் சிறப்பு அழைப்பாளர் தமிழ்நாடு மக்கள் சட்ட விழிப்புணர்வு மற்றும் நுகர்வோர்  நலச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் திருமுருகன் மற்றும் மயிலாடுதுறை ஸ்ரீ ஜெயின் இளைஞர் மண்டல தலைவர் M.C.K.

மஹாவீர் சந்த் ஜெயின்,  ஜோதி பவுண்டேஷன் செயலாளர் மணிகண்டன் நல்த்துக்குடி பலராமன் மற்றும் ஜோதி பவுண்டேஷன் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர்