ஏரியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி ; பாமக தலைவர் ஜிகே மணி முயற்சிக்கு கிடைத்த வெற்றி..

ஏரியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி ; பாமக தலைவர் ஜிகே மணி முயற்சிக்கு கிடைத்த வெற்றி..


பென்னாகரம் தொகுதி ஏரியூரில் அரசு கலை -அறிவியல் கல்லூரி துவங்கப்படும், சட்டமன்றத்தில் இன்று (26.8.2021) அறிவிப்பு. கோரிக்கை நிறைவேற்றப்பட்டது, வரவேற்புக்குரியது. - பென்னாகரம் தொகுதிக்கு பரிசு- ஜி.கே.மணி                   சட்டமன்றத்தில் 26.8.2021 இன்று உயர்கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை மானிய கோரிக்கையில் முதலமைச்சர் அவர்கள் ஒப்புதலைப் பெற்று உயர் கல்கவித் துறை அமைச்சர் அவர்கள் தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தொகுதி ஏரியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்கப்படும் என அறிவித்தார். தமிழ்நாட்டில் மொத்தம் 10 கல்லூரிகள் துவங்கப்படும். அதில் ஒன்று ஏரியூர்.         

            சட்டமன்றத்தில் பென்னாகரம் தொகுதிக்கும் தர்மபுரி மாவட்டத்திற்கும் தமிழ்நாடு அளவிலும் நிறைய கோரிக்கைகளை சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகின்றேன். அப்பேச்சில் ஒன்றுதான் ஏரியூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி துவங்கப்பட வேண்டுமென்று இரண்டு முறை வலியுறுத்தி பேசினேன்.         

           எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் அவர்கள் ஒப்புதலைப் பெற்று உயர் கல்வித் துறை அமைச்சர்  இன்று சட்டமன்றத்தில் அறிவிப்பு செய்தார். மொத்தம் 10 கல்லூரி. இதில் ஒன்று ஏரியூர். கோரிக்கை ஏற்பு வரவேற்புக்குரியது. பென்னாகாம் தொகுதிக்கு கிடைத்த பரிசு.

#தலைவர் #தியாகச்செம்மல்